ஏற்காடு யூனியனுக்கு சொந்தமாக ஏற்காட்டின் பல்வேறு பகுதிகளில் நிலங்கள் உள்ளன. அந்த நிலங்கள் ஏற்காடு ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டு வருகிறது. இத்தகைய நிலங்களில் விதிமுறைகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.
இதை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சேலம் மாவட்ட பொது செயலாளர் மதியழகன் தலைமையில், ஏற்காடு ஒன்றிய செயலாளர் ராஜா உள்ளிட்டோர் அடங்கிய அக்கட்சியினர். ஏற்காடு யூனியன் அலுவலகத்தை ஒட்டியுள்ள நிலத்தை சுத்தம் செய்து குடிசை போட முயன்றனர்.
அங்கு வந்த ஏற்காடு உதவி பொறியாளர் சரவணன் நிலங்களை ஆக்கிரமிக்க கூடாது என்றார். அதை அவர்கள் கேட்காததால், ஏற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
உடனே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஏற்காடு காவல் துறையினர் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தி, பாரதிய ஜனதா கட்சியினரை கலைந்து போக கூறினர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
-நவீன் குமார்.
