தமிழகத்தில் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்!- வானிலை ஆய்வு மையம் தகவல்.

tamilrain_fc-72

தமிழகத்தில் சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (அக்.27) மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கடலோர தமிழக பகுதிகளுக்கு நகர்ந்து, அதே பகுதியில் நிலவுகிறது.

லட்சத்தீவு பகுதியிலிருந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கடலோர தமிழக பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் வரை தெற்கு கேரளா வழியாக சுமார் 3.1 கி.மீ. உயரம் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

Leave a Reply