பாதுகாப்புப் படைகளுக்காக ரூ.2.12 லட்சம் கோடி மதிப்பிலான பாதுகாப்புத் தளவாடங்களைக் கொள்முதல் செய்ய ஒப்புதல்.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் 2026 அக்டோபர் 26 அன்று நடைபெற்ற பாதுகாப்புத் தளவாட கொள்முதல் குழு பாதுகாப்புப் படைகளுக்கான சுமார் ரூ.2,12,000 கோடி மதிப்பிலான பல்வேறு மூலதன கொள்முதல் முன்மொழிவுகளுக்குக் கொள்கை ரீதியிலான நிர்வாக ஒப்புதலை அளித்தது. இந்திய ராணுவத்திற்கு அதிவிரைவு வாகனங்கள், தானியங்கி துப்பாக்கி அமைப்பு, துப்பாக்கி சூட்டிற்கு எதிர் தாக்குதல் நடத்தும் அமைப்பு, இலகுரக பன்னோக்கு ஹெலிகாப்டர்கள், மிக குறுகிய தூரம் கொண்ட வான் பாதுகாப்பு அமைப்பு, ஆளில்லா கண்காணிப்பு விமானம், ஒருங்கிணைந்த கண்காணிப்பு மற்றும் தாக்குதல் அமைப்பு ஆகியவற்றைக் கொள்முதல் செய்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த அதிவிரைவு வாகனங்கள் சவால்மிக்க நிலப்பரப்புகளில் செயல்பாட்டுத் திறன்கள், தளவாட ஆதரவு, இயங்குதிறன் ஆகியவற்றை மேம்படுத்தும். இலகுரக பன்னோக்கு ஹெலிகாப்டர் அமைப்பானது இந்திய ராணுவம், விமானப்படை ஆகிய இரண்டு படையாலும் உளவு, கண்காணிப்பு, போர், வீரர்களை தேடி மீட்பது, மனிதாபிமான உதவி, பேரிடர் நிவாரணம் ஆகியவற்றிக்காக பயன்படுத்தப்படும்.

Leave a Reply