தமிழ்நாட்டில் ரூ.1,037.70 கோடி மதிப்பீட்டில் 340 ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியச் சாலைகளை இதர மாவட்டச் சாலைகளின் தரத்திற்கு உயர்த்த முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் கிராமப்புறங்களில் உள்ள சாலைகளின் தரம் மேம்படுத்தப்பட்டு, பொதுமக்களின் போக்குவரத்து வசதி எளிதாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கிராமப்புற மக்களின் அன்றாடப் பயணம், விவசாயப் பொருட்களைக் கொண்டு செல்வது உள்ளிட்ட போக்குவரத்துத் தேவைகளுக்கும் இந்தச் சாலை மேம்பாட்டுப் பணிகள் உதவும்.
இந்தத் திட்டத்தின் கீழ் 340 சாலைகள் மேம்படுத்தப்பட உள்ளன. இதற்காக மொத்தம் ரூ.1,037.70 கோடி நிதி ஒதுக்கீட்டில் பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
கே.பி.சுகுமார்
