இந்தியப் பெருங்கடல் பிராந்திய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் பிரதமர் சந்திப்பு!

புதுடெல்லியில் நடைபெற்ற இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகள் கூட்டமைப்பின் (IORA) 25-வது அமைச்சர்கள் குழுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த 23 உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் பிரதமர் இன்று (நவம்பர் 27) சந்திப்பு நடத்தினார்.
இந்தியப் பெருங்கடல் நாடுகளுக்கு இடையேயான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளைப் பிரதமர் எடுத்துரைத்தார். மேலும், IORA அமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ள இந்தியா, ‘MAHASAGAR’ தொலைநோக்குத் திட்டத்தின் மூலம் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் அனைவருக்குமான வளர்ச்சியை மேம்படுத்த உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

Leave a Reply