தமிழ்நாடு அரசில் பணிபுரியும் ஆண் பணியாளர்களுக்கு முதன்முறையாக தந்தையர் மகப்பேறுகால விடுப்பு (Paternity Leave) வழங்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
அரசின் இந்த அறிவிப்பின்படி, திருமணமான ஆண் அரசுப் பணியாளர்களுக்கு 15 நாட்கள் விடுப்பு வழங்கப்படும். இந்த விடுப்பை குழந்தை பிறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பிருந்தோ அல்லது குழந்தை பிறந்த நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள்ளாகவோ எடுத்துக்கொள்ளலாம்.
குழந்தை பிறக்கும் காலகட்டத்தில் தாய்க்கு உடல் மற்றும் மனரீதியான ஆதரவு அளிப்பதுடன், குழந்தை பராமரிப்பிலும் தந்தையின் பங்களிப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கே.பி.சுகுமார்
