ஆயுர்வேதக் கல்லூரிகள் இன்றைய தேவைகளுக்கு ஏற்ற ஆயுர்வேதக் கல்வியை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் !– குடியரசுத் தலைவர்.

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள வைத்தியரத்னம் ஆயுர்வேதக் கல்லூரியின் பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (2026 நவம்பர் 27) கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், ஆயுர்வேத மருத்துவத்தின் சர்வதேச  மதிப்பை உயர்த்துவதில் கேரள மாநிலம் முக்கியப் பங்காற்றி வருவதாகக் குறிப்பிட்டார். அதே நேரத்தில், பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவக் கல்வியையும் தொடர்ந்து பாதுகாத்து வளர்த்து வருவதாக அவர் தெரிவித்தார். பாரம்பரிய முறையில் உண்மையான ஆயுர்வேத மருந்துகளைத் தயாரிக்கும் நடைமுறையும் கேரளத்தில் தொடர்ந்து சிறப்பாக வளர்ந்து வருவதாகக் குறிப்பிட்டார். இதுபோன்ற பாரம்பரிய அறிவும் மருத்துவ முறைகளும் பாதுகாக்கப்படுவது ஆயுர்வேதத்தின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆயுர்வேத மருத்துவத்தின் மற்றொரு சிறப்பம்சத்தையும் குடியரசுத்தலைவர் எடுத்துரைத்தார். ஆயுர்வேதத்தின் மூல நூல்கள் சமஸ்கிருத மொழியில் மட்டுமே எழுதப்படவில்லை என்றும், மலையாளம், உள்ளிட்ட மொழிகளிலும் ஏராளமான மூல நூல்கள், உரை விளக்கங்கள் எழுதப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆயுர்வேதக் கல்லூரியும் மக்களுக்கு உண்மையான, பயனுள்ள மருத்துவச் சேவையை வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.  தற்போதைய, எதிர்காலத் தலைமுறையினர் எதிர்கொள்ளும் உடல்நலப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணக்கூடிய நிபுணர்களை உருவாக்குவது கல்லூரிகளின் முக்கியப் பொறுப்பு என்றும் அவர் தெரிவித்தார்.

வைத்தியரத்னம் ஆயுர்வேதக் கல்லூரியின் செயல்பாடுகள் இந்த நோக்கத்துடன் அமைந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2047-க்குள் ஆரோக்கியமான, வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் இலக்கில் ஆயுர்வேதக் கல்வி நிறுவனங்களும் பங்களித்து வருவதாகக் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தெரிவித்தார்.

Leave a Reply