மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், 2026 அக்டோபர் 25 அன்று நெதர்லாந்திற்கான தனது பயணத்தைத் தொடங்கினார். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, இந்திய-நெதர்லாந்து பொருளாதார உறவுகளை வலுப்படுத்துதல், வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான புதிய வாய்ப்புகளை ஆராய்தல், மற்றும் நெதர்லாந்தில் வசிக்கும் இந்திய சமூகத்தினருடனான பிணைப்பை ஆழப்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டார்.
ராட்டர்டாமில் தனது பயணத் திட்டத்தின் ஒரு பகுதியாக, திரு பியூஷ் கோயல், ராட்டர்டாம் துறைமுகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு பௌட்வைன் சீமன்ஸுடன் இணைந்து அந்தத் துறைமுகத்தைப் பார்வையிட்டார். ஐரோப்பாவின் மிகப்பெரிய துறைமுகமான ராட்டர்டாம், இந்தியப் பொருட்கள் ஐரோப்பியச் சந்தையை அடைவதற்கான நுழைவாயிலாகவும், சர்வதேச வர்த்தகம் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் ஒரு முக்கிய மையமாகவும் திகழ்கிறது என்பதை இந்தப் பயணம் எடுத்துரைத்தது. ராட்டர்டாம் துறைமுகத்திற்கு அமைச்சர் மேற்கொண்ட பயணம், குறிப்பாக இந்திய – ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் பின்னணியில், ஐரோப்பாவிற்கான நுழைவாயிலாக நெதர்லாந்து கொண்டுள்ள உத்திசார் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தது.
எஸ்.சதிஸ் சர்மா
