வாக்கி-டாக்கிகளின் இயக்க அதிர்வெண்கள், உரிமத் தேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய ஒழுங்குமுறைத் தகவல்களை வெளியிடத் தவறிய, தவறான தகவல்களை வழங்கும் விளம்பரங்களையும் தயாரிப்புப் பட்டியல்களையும் வெளியிட்டதற்காக, மெஸ்ஸர்ஸ் ஹோகர் டெக்னாலஜிஸ் அண்ட் இன்னோவேஷன்ஸ் எல்எல்பி நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையமான சிசிபிஏ, ₹1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
இணையதளங்களில் வாக்கி-டாக்கிகளை (தனிநபர் மொபைல் ரேடியோக்கள்) பட்டியலிடுதல், விளம்பரப்படுத்துதல், விற்பனை தொடர்பான தவறான விளம்பரங்கள் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளுக்கு எதிராக சிசிபிஏ மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான அமலாக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.
நுகர்வோர் நலன்களைப் பாதுகாப்பதற்கும், தவறான விளம்பரங்களைத் தடுப்பதற்கும், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைத் தடுப்பதற்கும், ஆணையம் உறுதியுடன் உள்ளது.
எஸ்.சதிஸ் சர்மா
