ஜெர்மன் தொழில்துறை தலைவர்கள், ஆராய்ச்சி நிறுவனங்களுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல்,  ஜெர்மனியில் மேற்கொண்ட இரண்டு நாள் அரசுமுறைப் பயணத்தை 2026 அக்டோபர் 23 அன்று பெர்லினில் நிறைவு செய்தார்.

இந்தப் பயணத்தின் போது, அந்நாட்டு அரசின் மூத்த அதிகாரிகள், வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுவாழ் இந்திய வம்சாவளியினரை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

வர்த்தகம், முதலீடு, மேம்பட்ட உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் ஆகிய துறைகளில், இந்தியா-ஜெர்மனி ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இந்த சந்திப்புகள் நடைபெற்றன.

ஜெர்மன் சான்சலரின் பொருளாதார, நிதிக் கொள்கை ஆலோசகரும், ஜி7/ஜி20 அமைப்பின் தலைவருமான திரு லெவின் ஹோலேவுடன் திரு பியூஷ் கோயல் பேச்சு நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது, இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு, பொருளாதார, முதலீடு சார்ந்த உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், புத்தாக்கம் சார்ந்த துறைகளில், ஒத்துழைப்பு குறித்து விவாதிப்பதற்காக, அந்நாட்டைச் சேர்ந்த முக்கிய தொழில்முறை ஆராய்ச்சி நிறுவனங்களின் தலைவர்களுடன் நடைபெற்ற வட்டமேசை விவாதத்தில் திரு பியூஷ் கோயல் பங்கேற்றார்.

Leave a Reply