சாதனை புரிந்துள்ள வீரர்களுக்கும் சாதிக்கத் துடிக்கும் இளம் தலைமுறையினருக்கும் என்றும் உறுதுணையாக இருந்து, அவர்களின் திறமைகள் மேலும் வளரவும், வெற்றிகள் பல குவிக்கவும் அனைத்து நிலையிலும் தமிழக அரசு துணை நிற்கும்” என்று முதல்வர் விஜய் உறுதி அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “ஜப்பானில் நடைபெற்ற பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவின் சார்பில் பங்கேற்ற தமிழ்நாட்டை சேர்ந்த பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகள் 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளமைக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எஸ்.திவ்யா
