என்எல்சி இந்தியா நிறுவனம், 6-வது சிறப்புத் தூய்மை இயக்கத்தில் முக்கிய இலக்குகளை எட்டி சிறப்பான செயல்பாடு!

நிர்வாக சீர்திருத்தங்கள் துறையின் தலைமையில், அனைத்து மத்திய அமைச்சகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் முன்னெடுக்கப்படும் நாடு தழுவிய சிறப்புத் தூய்மை இயக்கம் 6-ஐ என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் தீவிரமாக மேற்கொண்டுள்ளது.

 ஆயத்தக் கட்டத்தைத் (செப்டம்பர் 15–30, 2026) தொடர்ந்து, செயல்பாட்டுக் காலகட்டத்தில் என்எல்சி இந்தியா-வின் அனைத்துப் பிரிவுகள், மண்டல அலுவலகங்களில் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன. இந்நிறுவனம் தற்போது செயலாக்கக் கட்டத்தை 2026 அக்டோபர் 2 முதல் 31 வரை செயல்படுத்தி வருகிறது. இதில் மின்னணுக் கழிவுகளைத் திறம்படச் சேகரித்தல், பிரித்தல், சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் அகற்றுதல் ஆகியவற்றிற்கு பிரத்யேக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

 தனது அனைத்துப் பிரிவுகளிலும் குறிப்பிடத்தக்க செயல்பாட்டை வெளிப்படுத்திய என்எல்சிஐஎல், தனது ஆரம்ப இலக்கான 145 தளங்களைத் தாண்டி, 180 தளங்களில் தூய்மை இயக்கங்களை ஏற்பாடு செய்ததுடன், முன்மொழியப்பட்ட 2,415,786 சதுர அடிக்கு எதிராக 2,496,193 சதுர அடி இடத்தை வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளது. இந்நிறுவனம் 1,272 மெட்ரிக் டன் கழிவுகளை அகற்றி, தனது 1,266.22 மெட்ரிக் டன் இலக்கை வெற்றிகரமாகத் தாண்டி, ₹3,11,89,078 வருவாயை ஈட்டியுள்ளது.

இந்த முன்முயற்சிகளின் மூலம், நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் என்எல்சி இந்தியா லிமிடெட், சிறப்பு இயக்கம் 6-ஐ செயல்படுத்துவதில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது.

Leave a Reply