சட்டவிரோத கனிம வள கடத்தலை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவுறுத்தல்.

சட்டவிரோத கனிம வள கடத்தலை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். இயற்கை வளங்கள் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. சட்டவிரோத கனிமவள கடத்தலை தடுக்க நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. கனிம வருவாயைப் பெருக்குவதற்கான பல்வேறு வழிமுறைகள் குறித்தும் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று (4.6.2026) தலைமைச் செயலகத்தில், இயற்கை வளங்கள் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கனிமவள மேலாண்மையில் தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்றும் வகையில், புவியியல் மற்றும் சுரங்கத் துறையானது, கனிமவள ஆய்வினை அறிவியல் பூர்வமான முறையில் மேற்கொண்டு, சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களுக்கு உகந்த வகையில் கனிமங்களை அகழ்ந்தெடுப்பது குறித்தும், கனிமக் குத்தகைக்கு விடப்பட்ட குவாரிகளைக் கண்காணிப்பதற்காக, குத்தகைப் பகுதிகளின் எல்லைகளை நிர்ணயம் செய்து குத்தகைக்கு விடப்பட்ட பகுதியிலிருந்து வெட்டி எடுக்கப்படும் கனிமத்தின் சரியான அளவைத் தீர்மானிப்பதற்காக ஆளில்லா விமானம் மூலம் அளவீடு செய்யும் முறை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

Leave a Reply