இந்திய கடற்படையின் முதல் பயிற்சி அணியை சேர்ந்த கப்பல்களான ஐஎன்எஸ் திர், ஐஎன்எஸ் சுஜாதா, இந்திய கடலோர பாதுகாப்பு கப்பலான சாரதி ஆகியவை, நீண்டதூர பயணத்திற்கு பின் மாலத்தீவில் உள்ள மாலே பகுதியை 2026 அக்டோபர் 21-ம் தேதி சென்றடைந்தன. இந்த கப்பல்களை மாலத்தீவு தேசிய பாதுகாப்பு படையினர் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து, இந்திய கடற்படையின் முதல் பயிற்சி அணியின் மூத்த அதிகாரி, மாலத்தீவு தேசிய பாதுகாப்பு படையின் தலைவர் ஆகியோரின் சந்திப்பு நடந்தது. அப்போது, இந்தியா, மாலத்தீவு இடையேயான வலுவான கடல்சார் பங்களிப்பு, கடற்படையை மேம்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது, கடற்படையில் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை குறித்து இருதரப்பினரும் ஆலோசனை நடத்தினர்.
திவாஹர்
