உலகளாவிய எரிசக்திப் பாதுகாப்பைப் பாதிக்கும் இடையூறுகள் குறித்து இலங்கை ஜனாதிபதியிடம் பிரதமர் நரேந்திர மோதி பேச்சு.

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இலங்கை ஜனாதிபதி மேதகு அனுர குமார திசநாயக்கவிடமிருந்து தொலைபேசி அழைப்பைப் பெற்றார்.

உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பைப் பாதிக்கும் இடையூறுகளுக்கு முக்கியத்துவம் அளித்து, மேற்கு ஆசியாவில் உருவாகி வரும் சூழ்நிலை குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

ஒட்டுமொத்த உலக நலன் கருதி, கப்பல் போக்குவரத்துப் பாதைகளைத் திறந்த நிலையிலும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் மீண்டும் வலியுறுத்தினர். 

இந்தியா-இலங்கை எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும், பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட பல்வேறு முன்னெடுப்புகளின் முன்னேற்றத்தை இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர்.

இந்தியாவின் ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ கொள்கை மற்றும் ‘மகாசாகர்’ தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, பொதுவான சவால்களை எதிர்கொள்வதில் இந்தியா ஒன்றிணைந்து நெருக்கமாகப் பணியாற்றும் என்ற இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டைப் பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.

இரு தலைவர்களும் தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டனர்.

Leave a Reply