சேலம், விருதுநகர் அரசு அருங்காட்சியகங்களுக்கு ரூ.17.43 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் .

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  26.2.2026 அன்று தலைமைச் செயலகத்தில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் அருங்காட்சியகத் துறையால் 5 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சேலம் அரசு அருங்காட்சியக புதிய கட்டடம் மற்றும் 12.43 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள விருதுநகர் அரசு அருங்காட்சியக புதிய கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார். மேலும், 248.66 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள திருவண்ணாமலை மற்றும் மாமல்லபுரத்தில் தமிழர் பண்பாட்டு அருங்காட்சியக புதிய கட்டடங்கள், சென்னை அரசு அருங்காட்சியக வளாகத்தில் புதிய படிமக் கூடம் மற்றும் சிந்துவெளிப் பண்பாட்டு அரங்கம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டினார்.

Leave a Reply