krishnan
ஏற்காடு கே.புத்தூர் கிராமத்தை சேர்ந்த தங்கமணி, உண்ணாமலை தம்பதியரின் மகன் கிருஷ்ணன் (வயது 25), திருமணம் ஆகாதவர். இவர் அசம்பூர் கிராமத்தில் உள்ள தனியார் எஸ்டேட் ஒன்றில் மரம் வெட்டும் பணி செய்து வருகிறார்.
இன்று கிருஷ்ணன் உட்பட 15 பேர் இணைந்து வெட்டப்பட்ட மரங்களை தோளில் சுமந்தபடி எடுத்து வந்து எஸ்டேட்டின் ஒரு பகுதியில் சேகரித்தனர். இந்த பணியின் போது மிகவும் கணமான மரம் ஒன்றை சுமந்து வந்து கீழே போடும் போது கிருஷ்ணன் கீழே விழுந்துவிட்டார். அப்போது கிருஷ்ணனின் தலை மரத்திற்கு அடியில் சிக்கி தலை மீது விழுந்தது. இதில் கிருஷ்ணனின் முகம் மற்றும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனடியாக தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு சென்ற 108 ஆம்புலன்ஸ் பரிசோதகர் கிருஷ்ணனின் உடலை பரிசோதித்து விட்டு உயிரிழந்ததாக உடனிருந்தவர்களிடம் தெரிவித்தார். பின்னர் அங்கு வந்த ஏற்காடு காவல் ஆய்வாளர் குமார் தலைமையிலான காவல் துறையினர் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் கிருஷ்ணன் இந்த தனியார் எஸ்டேட்டில் மரங்கள் வட்டாட்சியரின் அனுமதியின்றி வெட்டப்பட்டுள்ளதாக கூறி மரங்களை வட்டாட்சியர் கைப்பற்றினார். மேலும் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தகவல் அளித்து அனுமதியின்றி மரம் வெட்டியதற்கு அபராதம் விதிக்கப்படும் என்றார்.
– நவீன் குமார்
[espro-slider id=11622]
