சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் நிரந்தர குடியிருப்புகள் கட்டிக் கொடுத்ததில் கோடிக்கணக்கில் கொள்ளை!- தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நடந்த மிகப்பெரிய தில்லு முல்லு!

Tsunami.jpga

Tsunami

tsunami death.jpg2tsunami death.jpg1 tsunami deathtsunami death.jpg3 tsunami death.jpg4 INDIA-ASIA-QUAKE-SURVIVORS-PRAYERS tsunami death.jpg6

இந்தியப் பெருங்கடல் பகுதியில் 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி ஏற்பட்ட ஆழிப்பேரலையில் (சுனாமி), ஆயிரக்கணக்கான மக்கள் பலியானார்கள். பல்லாயிரக்கணக்கானோர் வீடு மற்றும் வாழ்வாதாரங்களை இழந்து தவித்தார்கள்.

இந்தியாவைப் பொருத்தவரை தமிழ்நாடு, அந்தமான், புதுச்சேரி, ஆந்திரா, கேரளா ஆகிய பகுதிகள் சுனாமியால் பாதிப்புக்கு உள்ளானது. தமிழ்நாட்டில் மட்டும் 13 மாவட்டங்களில் மொத்தம் 7,996 நபர்கள் உயிரிழந்தனர். அந்தமானில் 454 நபர்களும், புதுச்சேரியில் 602 நபர்களும், கேரளாவில் 238 நபர்களும், ஆந்திராவில் 105 நபர்களும் ஆகமொத்தம் இந்திய அளவில் 9,395 நபர்கள் சுனாமியால் உயிரிழந்தனர். இதில் அதிகம் பாதிப்புக்குள்ளானது தமிழகம் என்பது குறிப்பிடத்தக்கது.

சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவ மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கியதிலும், நிரந்தர வீடுகள் கட்டிக் கொடுத்ததிலும் மிகப்பெரிய மோசடியும், குளறுபடியும், பெருமளவில் கொள்ளையும் நடைபெற்றுள்ளது.

தமிழகத்தில் நாகப்பட்டிணம் மாவட்டத்தைப் பொருத்தவரை குறிப்பாக BHARATHI, TMSSS, RITCO, AID AT ACTION மற்றும் பல தொண்டு நிறுவனங்கள், சுனாமியால் பாதிக்கப்பட்ட கிராமங்களை தத்தெடுத்து, நலத்திட்ட உதவிகளையும் மற்றும் நிரந்தர குடியிருப்புகளையும் கட்டிக்கொடுக்கும் பணிகளில் ஈடுப்பட்டு வந்தன.

நிரந்தரக் குடியிருப்புகள் கட்டுவதில் முந்தைய தி.மு.க அரசுடன், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கைக்கோர்த்துக் கொண்டு, வீடுகள் கட்டிக் கொடுக்காமலேயே கட்டிக் கொடுத்ததாக கோடிக் கணக்கான ரூபாய்களை கொள்ளையடித்துள்ளனர்.

இதற்கு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளும், கடலோர மாவட்டங்களில் பணியாற்றிய அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் உள்பட, அனைத்துத் துறைச் சார்ந்த அதிகாரிகளும், மீன்வளத் துறை ஆணையர்கள், மீன்வளத்துறை இணை இயக்குநர்கள், மீன்வளத்துறை தலைமைச் செயலக அரசு சார்பு செயலாளர்கள், வருவாய் தலைமைச் செயலக அரசுசார்பு செயலாளர்கள் ஆகிய அனைவரும், இந்த முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்ததோடு மட்டுமல்லாது, அவரவர் பங்குக்கு இதில் எவ்வளவு சுருட்ட முடியுமோ அந்த அளவிற்கு சுருட்டியுள்ளனர்.

தமிழகத்தில் சுனாமியால் பாதிக்கபட்ட 13 மாவட்டங்களில், பணியாற்றிய அரசு அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் பெயர் பட்டியலை சேகரித்து ரகசியமாக அவர்களுடைய குடும்பத்தார், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோரின் சொத்துக்களை ஆய்வு செய்தால், எந்த அளவிற்கு அவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகும். அதிகாரிகளே இந்த அளவிற்கு கொள்ளையடித்திருக்கும் போது, அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் செயல்பாட்டை நாம் சொல்லவா வேண்டும்?

இதில் சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலோர மாவட்டங்களில் உள்ள அப்போதைய ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள்(MLA), பாராளுமன்ற உறுப்பினர்கள் (MP), உள்ளாட்சி அமைப்புகளைச் சார்ந்த பிரதிநிதிகள்… இப்படி அனைவரும் கூட்டுக் களவாணிகளாக செயல்பட்டு கோடிக்கணக்கான ரூபாய்களை கொள்ளையடித்துள்ளனர்.

வீடுகள் தரமான கட்டுமான பொருட்களைக் கொண்டு கட்டப்படாததால், கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகள் தரமற்றதாகவும், மிக மோசமான நிலையிலும் உள்ளது. பல பகுதிகளில் கட்டியும் கட்டாமலும், பூசியும், பூசாமலும் அறைக்குறையாக விடப்பட்டுள்ளது.

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கியதிலும், நிரந்தர வீடுகள் கட்டிக் கொடுத்ததிலும் அரசின் விதிமுறைகள் கடுகளவும் கடைப்பிடிக்கபடவில்லை. அப்போதைய ஆளுங்கட்சிக்காரர்களும், அதிகாரிகளும், தனியார் தொண்டு நிறுவனங்களும் வைத்தது தான் சட்டமாக இருந்து வந்துள்ளது.

விரக்தியிலும், வேதனையிலும் இருந்த மீனவ மக்களிடம் பல ஏமாற்றுத் தொண்டு நிறுவனங்களும், பல தனியார் அமைப்புகளும், உங்களுக்கு வீடு கட்டித் தருகிறோம், மீன்பிடி தொழில் செய்வதற்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு கடன் உதவி பெற்றுத் தருகின்றோம், உங்கள் குழந்தைகள் படிப்பதற்கு நிதி உதவி வாங்கி தருகின்றோம்… என்று ஆசை வார்த்தைகளைச் சொல்லி அப்பாவி மக்களை மூளை சலவை செய்து வசூல் வேட்டை நடத்தி தலை மறைவாகி இருக்கிறார்கள்.

இப்படி கொள்ளையடிக்கப்பட்ட ரூபாய்களில் பெருந்தொகை, 2009 பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க வேட்பாளர்கள் தேர்தல் பணிக்காக செலவிடப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க வெற்றிக்காக, சுனாமி நிவாரணப்பணிகளில் ஈடுபட்ட அரசு சாரா தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் அனைவரும், வரிந்து கட்டிக் கொண்டு தேர்தல் பணி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுனாமியால் பாதிக்கபட்ட தமிழக கடலோர மாவட்டங்களில் நிரந்தர வீடுகள் கிடைக்கப் பெறாத மீனவ மக்கள் அனைவரும், நிரந்தர வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று, பல்வேறு போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும், உண்ணாவிரதங்களையும், சாலை மறியலையும் பலமுறை செய்தும், எந்த பயனும் இல்லாததால், விரக்தி அடைந்த மக்கள் 2009 பாராளுமன்றத் தேர்தல் சமயத்தில் தேர்தல் புறக்கணிப்பு போராட்டங்களை பல இடங்களில் அறிவித்தனர்.

4 Samadhana Koottam P1 15june2009

சமாதான கூட்ட விபரம்.

சமாதான கூட்ட விபரம்.

உடனே, அப்போதைய தி.மு.க அரசு, இரவு பகலாக அம்மக்களைச் சந்தித்து, பாராளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் உங்களுக்கெல்லாம் வீடு கட்டித் தருகிறோம், உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் ஒன்று விடாமல் நிறைவேற்றித் தருகிறோம் என்று, காலில் விழாத குறையாக கெஞ்சி, கூத்தாடி உத்திரவாதம் அளித்தனர்.

அந்த வஞ்சகர்களின் வசிய வார்த்தைகளைக் கேட்டு, தேர்தல் புறக்கணிப்பை கைவிட்டு, 2009 பாராளுமன்ற தேர்தலில், தி.மு.க கூட்டணிக்கு ஓட்டும் போட்டனர். ஆனால், சுனாமியால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மீனவ மக்களுக்கு அதன் பிறகும் எந்த விடிவும் கிடைக்கவில்லை.

இதனால் தி.மு.க அரசு மீது, சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவ மக்கள், கடும் கோபத்தில் இருந்தனர். அவற்றின் விளைவுதான் 2011 சட்டமன்றத் தேர்தலிலும் மற்றும் 2014 மக்களவை தேர்தலிலும் தி.மு.க. படுதோல்வியை சந்தித்தது.

தமிழகத்தில் உள்ள பிரபல புலனாய்வு இதழ்களின் செய்தியாளர்கள் சிலர், சுனாமியால் பாதிக்கப்பட்டப் பகுதிகளுக்கு நேரில் சென்று, அங்குள்ள மக்களை சந்தித்து பேட்டி, புகைப்படம் மற்றும் ஆதாரங்களை சேகரித்துக் கொண்டு, அதன் பிறகு சுனாமி நிதியில் மோசடி செய்துள்ள அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும், தனியார் தொண்டு நிறுவன நிர்வாகிகளையும் சந்தித்து, அவர்களிடம் தாங்கள் சேகரித்த விவரங்களை காட்டி, அன்பாக மிரட்டி, அவர்களிடம் இருந்து தனிப்பட்ட முறையில் ஆதாயம் அடைந்துள்ளனர். புலனாய்வு இதழ்களின் நிருபர்களின் லட்சணமே இதுவென்றால், தினசரி பத்திரிகையாளர்களை நாம் சொல்வா வேண்டும்?

சுனாமியால் பாதிப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கியதிலும், நிரந்தர குடியிருப்புகள் கட்டிக் கொடுத்ததிலும், நடைபெற்ற முறைக்கேடுகள், மோசடிகள் பற்றி அப்போதைய வருவாய் துறை அமைச்சருக்கும், மீன்வளத்துறை அமைச்சருக்கும், அப்போதைய தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதிக்கும், பலமுறை உரிய ஆதாரங்களோடு எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையெல்லாம் பார்க்கும் போது, அவர்களுக்கும் இதில் பங்கு இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. அதை உறுதி செய்யும் வகையில்தான் அவர்களின் பேச்சும், நடவடிக்கைகளும் இருந்தது.

முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி. சாமி.

முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி. சாமி.

2010 –ம் ஆண்டு மே மாதம் 5-ம் தேதி தமிழகச் சட்டப்பேரவையில் நடைபெற்ற மீன்வனத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், கலந்து கொண்டு பதிலளித்த மீன் வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி, சுனாமி மறுவாழ்வு திட்டப் பணிகள் தி.மு.க ஆட்சயில்தான் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த (ஜெயலலிதா) ஆட்சியில் எந்தவித நிரந்தர நிவாரணப் பணிகளும் நடைபெறவில்லை என்று கூறினார்.

மேலும், சுனாமி பாதித்த 13 மாவட்டங்களில், மாவட்ட ஆட்சியரை அழைத்து நேரில் ஆய்வு செய்து, ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, 2 இலட்சத்து முப்பதாயிரம் வீடுகள் கட்ட முடிவெடுத்து, 40 ஆயிரம் வீடுகளை இந்த அரசுதான் கட்டிக் கொடுத்துள்ளது என்றும், சுனாமியால் பாதித்த மீனவர்களின் ரூ.80 கோடி கடனை ரத்து செய்து, அதனையும் மத்திய அரசு நிதியுதவிகளை எதிர்பார்க்காமல், மாநில அரசே ஏற்றுக்கொண்டது என்றும், அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் சுனாமி நிவாரணப் பணிகள் நடைபெறவில்லை என்றும், மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி. சாமி கூறினார்.

அதற்கு அ.இ.அ.தி.மு.க உறுப்பினர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு எதிராக தி.மு.க உறுப்பினர்களும் குரல் கொடுத்தனர். இதனால் தமிழக சட்டப் பேரவையில் கூச்சலும், குழப்பமும் ஏற்ப்பட்டது.

இந்த கூச்சலுக்கு இடையே, நான் உண்மையைதான் கூறுகிறேன், உண்மையை தவிர வேறில்லை, நான் பேசி முடித்ததும் உங்கள் பதிலைக் கூறுங்கள் என்று,  மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி. சாமி கூறினார்.

முன்னாள் வருவாய் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி.

முன்னாள் வருவாய் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி.

அப்போது அப்போதைய வருவாய் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் சுனாமி பாதித்த பகுதிகளில் ஒரு சில உடனடி நிவாரணப்பணிகள் தான் நடைப்பெற்றது. நிரந்தரப் பணிகள் எல்லாம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது தி.மு.க ஆட்சியில்தான். குறிப்பாக சுனாமி மறுவாழ்வு பணிக்காக உலக வங்கியின் நிதி உதவி அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் கிடையாது. இப்போது உள்ள தி.மு.க ஆட்சியல்தான் முதலமைச்சர் கருணாநிதி உலக வங்கி அதிகாரிகளை நேரில் வரவழைத்து, சுனாமி மறுவாழ்வு பணிகள் குறித்து பேசி, சுமார் 160 கோடி ரூபாய் நிதி பெற்று அதில் 17 ஆயிரம் வீடுகள் கட்டித் தந்திருக்கிறார் என்றார். இத்துடன் பிரச்சினையை அப்போதைய அவைத்தலைவர் ஆவுடையப்பன் முடிவுக்குக் கொண்டு வந்தார். இது ஒருபுறம் இப்படி இருக்க.

அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி 19.05.2010 அன்று கேள்வி-பதில் வடிவில் வெளியிட்ட அறிக்கையில், சுனாமிக்குப் பிறகு இரண்டாண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஜெயலலிதா, சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு, எந்த உதவியும் செய்யவில்லை என்றும், அப்போது (அ.இ.அ.தி.மு.க) கட்டிய வீடுகளின் எண்ணிக்கை 8,406 என்றும், ஆனால், தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கட்டப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 26,862 என்றும், அந்த செய்தியில் கூறியுள்ளார்.

சுனாமி ஏற்ப்பட்டது 26.12.2004, ஜெயலலிதா ஆட்சி 2006 மே மாதம் வரை இருந்தது. இதை அப்போதைய முதல்வர் மு.கருணாநிதியும், தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அப்படியானால், இடைப்பட்ட காலம் 17 மாதங்கள், இதை படிக்காத பாமரர்களை கேட்டால் கூட, விரல் விட்டு எண்ணி சொல்லி விடுவார்கள். ஆனால், அப்போதைய தமிழக முதல்வர் மு. கருணாநிதி 17 மாதங்களை எப்படி இரண்டு வருடங்கள் என்று குறிப்பிட்டார்? ஒரு வருடத்திற்கு 12 மாதங்கள் என்றால், 2 வருடங்களுக்கு 24 மாதங்கள் என்ற அடிப்படை விசயத்தைக் கூட அவர் மறந்து விட்டாரா? அல்லது யாரோ எழுதிக்கொடுத்த அறிக்கையை அப்படியே செய்தியாக வெளியிட்டாரா? இதற்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும்.

தமிழ சட்டசபையில் 05.05.2010 அன்று மீன்வளத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் கலந்து கொண்டு பதிலளித்த மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி. சாமி, கடந்த அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் சுனாமியால் பாதித்த மீனவ மக்களுக்கு எந்தவித நிரந்தர நிவாரணப்பணிகளும் நடைபெறவில்லை என்றும், தற்போதைய தி.மு.க ஆட்சியல்தான் 2 இலட்சத்து முப்பதாயிரம் வீடுகள் கட்ட முடிவெடுத்து 40 ஆயிரம் வீடுகளை இந்த அரசு கட்டிக் கொடுத்துள்ளது என்று சட்டசபையில் பதிவு செய்துள்ளார்.

அடுத்து இரண்டு வாரங்களுக்கு பிறகு அதாவது 19.05.2010 அன்று தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி, கடந்த அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் 8,406 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டதாகவும், தற்போதைய தி.மு.க 26,862 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளார். அப்படியானால், தமிழக சட்ட சபையில், சம்பந்தப்பட்ட மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி. சாமி கூறியிருக்கும் தகவல் உண்மையா? அல்லது அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி சொல்லியிருக்கும் தகவல்கள் உண்மையா? இதில் எது உண்மை? தமிழக மக்களை இவர்கள் மடையர்கள் என்று நினைக்கிறார்களா? அல்லது தமிழக மக்களுக்கு மறதி அதிகம் என்று நினைக்கிறார்களா?

அடுத்து, அ.இ.அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் 8,406 வீடுகள் கட்டிக் கொடுக்கப்ட்டதாகவும், தற்போதைய தி.மு.க ஆட்சியில் 26,862 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி கூறியுள்ளார்.

அப்படியானால் சுனாமி ஏற்பட்டது 26.12.2004, அதன்பிறகு 2006 மே மாதம் வரை ஜெ.ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க ஆட்சி இருந்தது என்று, இதை அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதியும் ஒத்துக் கொண்டுள்ளார். இதுதான் உண்மையும் கூட, அப்படியானால் சுனாமிக்குப் பிறகு 17 மாதங்கள் தான் ஜெயலலிதா ஆட்சிப்பொறுப்பில் இருந்துள்ளார். அப்போது கட்டப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 8,406 என்று அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதியே தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அப்படிப் பார்த்தால், சுனாமி மீட்பு பணிகளையும் செய்து முடித்து, சராசரியாக ஒரு மாதத்திற்கு 494 வீடுகள் வீதம் சுனாமிக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலகட்டத்தில் ஜெ.ஜெயலலிதா கட்டிக் கொடுத்துள்ளார்.

அதன் பிறகு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த மு.கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சியில், அதாவது மே 2006 முதல் மே 2010 வரை 48 மாதங்களில் சராசரியாக ஒரு மாதத்திற்கு 559 வீடுகள் கட்டியிக்கிறார், அப்படியானால், இதில் பீற்றிக் கொள்வதற்கும், சாதனை செய்து விட்டதாக மார்தட்டிக் கொள்வதற்கும், தம்பட்டம் அடித்துக் கொள்வதற்கும் இதில் என்ன இருக்கிறது?

இதையெல்லாம் பார்க்கும் போது சுனாமியால் இறந்தவர்கள் சொர்க்கம் போனார்களோ இல்லையோ? அவர்களின் குடும்பங்களுக்காக ஒதுக்கப்பட்ட சுனாமி நிதி சுரண்டப்பட்டுள்ளது என்பது மட்டும், வெட்டவெளிச்சமாக தெரிகிறது.

நிரந்தர வீடுகள் கட்டியதிலும், நிவாரணங்கள் வழங்கியதிலும், முறையான புள்ளி விவரங்களோ, கணக்குகளோ, பயனாளிகளின் பட்டியலோ அரசிடமே இல்லை என்பது, அப்போதைய தமிழக மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி. சாமி, அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி ஆகியோரின் அறிக்கைகளைப் பார்த்தாலே தெரிகிறது.

இவர்கள் வீடுகள் கட்டினார்களா? இல்லையா? எந்தந்தப் பகுதிகளில், எந்ததெந்த நிறுவனங்களின் மூலமாக எத்தனை வீடுகள் கட்டினார்கள்? இவர்கள் கட்டிய வீடுகளின் கணக்கிலே இத்தனை குளறுபடிகள் என்றால், இவர்கள் கட்டிய வீட்டின் இலட்சணம் எப்படி இருக்கும்? இதை நாங்கள் கேட்கவில்லை.

பாதிக்கப்பட்டட மீனவ மக்களின் சார்பாக, இந்த முறைகேடுகளுக்கு எதிராக 10 ஆண்டு காலமாக போராடி வரும் மீனவ மக்களின் பிரதிநிதி நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், மணியன்தீவு கிராமத்தைச் சேர்ந்த முருகையன் என்பவரின் மகன் பன்னீர்செல்வம் என்பவர் கேட்கிறார். இவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் மனு போட்டு, இந்த முறைக்கேட்டை கண்டுபிடித்து இருக்கிறார். இங்கு மட்டுமல்ல, சுனாமி பாதித்த 13 மாவட்டங்களிலும் இது போன்றுதான் முறைகேடுகள் நடைப்பெற்று இருக்கிறது.

மு.பன்னீர்செல்வம்.

மு.பன்னீர்செல்வம்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை போல, இந்த சுனாமி முறைக்கேட்டிற்கு கீழ்காணும் ஆதாரங்களே போதும் என்கிறார் பன்னீர்செல்வம்.

TMSSS என்ற நிறுவனம் நாகப்பட்டினம் மாவட்டத்தில், மொத்தம் 3500 வீடுகளை கட்டி முடித்துள்ளதாக முதலில் அறிவிப்பு பலகைகளை பொது இடங்களில் வைத்தது.

SUNAMI-HOUSESI

இதில் சந்தேகமடைந்த பன்னீர்செல்வம், அந்த அறிவிப்பு பலகையை படம் பிடித்து வைத்து கொண்டு, எந்தெந்த கிராமங்களில் எத்தனை வீடுகள் கட்டப்பட்டுள்ளது என்ற விபரத்தை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்டுள்ளார். உடனே, சுதாரித்து கொண்ட  நாகப்பட்டினம் மாவட்ட அரசு நிர்வாகம், இந்த தகவலை TMSSS நிறுவனத்திற்கு தெரிவித்தது.

உடனே, இரவோடு, இரவாக 3500 வீடுகள் என்று இருந்த அறிவிப்பு பலகையை, 2500 வீடுகள் என்று திருத்தம் செய்து உள்ளார்கள்.

SUNAMI HOUSE

இதிலும் திருப்தியடையாத பன்னீர்செல்வம். அனைத்து பயனாளிகள் பட்டியலையும், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுள்ளார். பலமுறை எழுத்துப்பூர்வமாக கேட்டும் உரிய பதில் வராததால், மாநில தகவல் ஆணையம் வரை அப்பீல் செய்தததின் விளைவாக, TMSSS நிறுவனம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2,178 வீடுகள் அமைத்துள்ளதாக நாகப்பட்டினம் மாவட்ட நிவாரணம் மற்றும் மறுவாழ்வு தனித்துணை ஆட்சியர் 28.12.2010 அன்று அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். ( கடித எண்: ந.க.9091/ஜெ4/2010)

6 TMSSS

நாகப்பட்டினம் மாவட்ட, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு தனித்துணை ஆட்சியர்  அனுப்பிய  கடிதம்.

நாகப்பட்டினம் மாவட்ட, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு தனித்துணை ஆட்சியர் அனுப்பிய கடிதம்.

ஆனால், TMSSS நிறுவனம் 09.01.2009 அன்று நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தங்கள் நிறுவனம் கட்டிய 2021 நிரந்தர வீடுகளுக்கு, 10.10.2007 முதல் 09.10.20017 வரை 10 ஆண்டுகளுக்கு, நேசனல் இன்சூரன்ஸ் கம்பெனியில் காப்பீடு செய்துள்ளதாகவும், அதற்கான காப்பீட்டு தொகை ஒரு வீட்டிற்கு ரூ.373 வீதம் 2021 வீடுகளுக்கு மொத்தம் ரூ.753833/- செலுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர். அதில் 11 கிராமங்களின் பெயர்களும், கட்டிய வீடுகளின் எண்ணிக்கையும்  குறிப்பிடபட்டுள்ளது.

3 TMSSS

TMSSS நிறுவனம் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு எழுதிய கடிதம்.

TMSSS நிறுவனம் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு எழுதிய கடிதம்.

mk

ஜெ.ஜெயலலிதா வழக்கில், நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா வழங்கிய தீர்ப்பில் 665-ம் பக்கத்தில் 20548 x Rs.433/- = Rs.8,90,55,032/- உள்ள கணக்கு பிழையை கண்டு கொள்ளாமல், நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பில் மட்டும் கணக்கு பிழை இருப்பதாக வாய்கிழிய பேசியும், பக்கம், பக்கமாக அறிக்கை வெளியிட்டும் வரும் திமுக தலைவர் மு.கருணாநிதி, தனது ஆட்சிக் காலத்தில் நடைப்பெற்ற மேற்படி முறைகேடுகளுக்கு என்ன பதில் சொல்ல போகிறார்?

மேலும், நாகப்பட்டினம் மாவட்ட நிவாரணம் மற்றும் மறுவாழ்வு தனித்துணை ஆட்சியர் 13.07.2009 அன்று கையெழுத்திட்டு அனுப்பியுள்ள கடிதத்தில், வரிசை எண் 13-ல் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோயில் இடங்களில் வீடுகள் கட்ட அனுமதி இல்லை, பட்டியலும் இல்லை என்று, பதில் அளித்துள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்ட, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு தனித்துணை ஆட்சியர்  அனுப்பிய  கடிதம்.

நாகப்பட்டினம் மாவட்ட, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு தனித்துணை ஆட்சியர் அனுப்பிய கடிதம்.

ஆனால் தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தின் மேலாளர் 06.11.2009 அன்று கையெழுத்திட்டு அனுப்பியுள்ள கடிதத்தில்(கடிதஎண்:ந.க.எண்.14369/09),வேதாரண்ய வட்டம் அருள்மிகு வேதாரண்யேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான வேதாரண்யம் பாகம் ஆறுகாட்டுத்துறை புலண் எண் 141/1, 148/3 ஆகிய இடங்களிலும், தனியார் பட்டாவில் புலண் எண் 149-லும், மொத்தம் 77 வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்றும், மேற்படி கோவில் நிலமும், தனியார் பட்டா நிலமும் ஒன்றாக உள்ள இடத்தில், சுனாமி வீடுகள் கட்டப்பட்டுள்ளதால், கோவில் நிலத்தில் மட்டும் எத்தனை வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்பதை அறிய இயலவில்லை என, வருவாய்துறையினர் தெரிவித்துள்ளனர் என்று, செயல் அலுவலர் தெரிவித்துள்ளார் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தின் மேலாளர் அனுப்பியுள்ள கடிதம்.

தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தின் மேலாளர் அனுப்பியுள்ள கடிதம்.

ஆயிரம் ஆடுகள் மந்தையில் இருந்தாலும், தனது குட்டியை தாய் ஆடு மிக சரியாக கண்டு பிடித்து பால் ஊட்டுகிறது. ஒரு ஆட்டிற்கு இருக்கும் அறிவு கூடவா, மக்கள் வரிப்பணத்தில் வாழ்க்கை நடத்தும் அதிகாரிகளுக்கு இல்லாமல் போயிற்று?

கோவில் நிலமும், தனியார் பட்டா நிலமும் ஒரே இடத்தில் இருந்தால், கோவில் நிலம் எது? தனியார் பட்டா நிலம் எது? என்று தெரியாமல் போய்விடுமா? அப்புறம் எதற்கு நில அளவை துறை?

பணம் கொடுத்தால் கடல் நிலப்பரப்பையே போலி பட்டா போட்டு கொடுக்கும் தமிழக வருவாய்துறையினருக்கு இது தெரியாதா?

திரளான மக்கள் கூட்டத்தில், ஒரே மாதிரி உடை உடுத்தி இருந்தாலும், தோற்றத்தில ஒரே மாதிரி இருந்தாலும், தன் குழந்தைகளையும், தன் மனைவியையும், மிக சரியாக அடையாளம் கண்டு அழைத்து வரும் அதிகாரிகளுக்கு, கோவில் நிலம் எது? தனியார் பட்டா நிலம் எது? என்று தெரியாமல் போய்விடுமா? யாரை ஏமாற்றுவதற்கு, இந்த நாடகம்? இது போன்ற அதிகாரிகள் இருக்கும் வரை, மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது.

அரசு அதிகாரிகளுக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் மற்றும் பிரச்சனைகள் இருந்தாலும், ஒரு அதிகாரி, ஒரு சக அதிகாரியை அவ்வளவு எளிதில் காட்டிக் கொடுக்க மாட்டார்கள். பிரச்சனைகளில் இருந்து காப்பாற்றதான் நினைப்பார்கள். ஏனென்றால், அவர்களுக்குள் அவ்வளவு ஒற்றுமை இருக்கிறது. அதனால்தான் திமுக ஆட்சி காலத்தில் நடைப்பெற்ற முறைகேடுகள் மீது கூட, அஇஅதிமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளுக்கு மேலாகியும், நடவடிக்கை எடுக்காமல் கிடைப்பில் போட்டுள்ளார்கள்.

தமிழகத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட 13 மாவட்டங்களில், மக்களுக்கு நிவாரணம் வழங்கியதிலும், நிரந்தர வீடுகள் கட்டிக் கொடுத்ததிலும், முந்தைய திமுக ஆட்சியில் நடைபெற்ற முறைக்கேடுகள் குறித்து, உரிய விசாரணை செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை குழுவை அமைத்து, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா உடனடியாக உத்தரவிட வேண்டும். அப்போதுதான் உண்மைகள் வெட்ட வெளிச்சமாகும்.

-டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com