தவெக தலைவர் விஜய் தலைமையில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி! 5000 நபர்களுக்கு மட்டுமே அனுமதி! தமிழ்நாடு உள்பட பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் வரக்கூடாது.

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் புதுச்சேரி யூனியன் பிரதேசம், உப்பளத்தில் டிசம்பர் 09ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணிக்கு தவெக தலைவர் விஜய் தலைமையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 5000 நபர்களுக்கு மட்டும் தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உரிய அனுமதி மற்றும் அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டும்தான் நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள். தமிழ்நாடு உள்பட பிற மாநில ரசிகர்கள், கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இங்கு அனுமதி இல்லை.

Leave a Reply