திருச்சி, சர்கார்பாளையம் அருகே பெண்ணை பின் தொடர்ந்து தொல்லைக் கொடுத்த இளைஞரை போலிசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், குவளக்குடியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், சர்கார்பாளையம் அருகே உள்ள பனையக்குறிச்சி ஊராட்சியில் செயல்பட்டு வரும் ”லயன் டேட்ஸ்” என்ற தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், இன்று மாலை வேலை முடித்து கோடைக்காலம் என்பதால் சர்கார்பாளையம், சிவன் கோயில் அருகே வயல்வெளியாக குவளக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த பெண்ணை பின் தொடர்ந்து முன் பின் அறிமுகம் இல்லாத குடிபோதையில் இருந்த ஆண் ஒருவர் செல்ல, சந்தேகமடைந்த அந்த பெண் வேக, வேகமாக நடந்துள்ளார். அறிமுகம் இல்லாத அந்த ஆணும் அந்த பெண்ணை பின் தொடர்ந்து வேக, வேகமாக சென்றுள்ளார்.

ஏன் என்னை பின் தொடர்ந்து வருகிறாய்? என்று அந்த பெண் கேட்க, அவனிடமிருந்து முறையான பதில் இல்லை. இதனால் பதட்டமடைந்த அந்த பெண், சப்தம் போட்டுள்ளார். இதைக் கண்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் குடிபோதையில் இருந்த அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்ததோடு, உடனே காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் போலிசார், அந்த நபரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

-ஆர்.சிராசுதீன்.

One Response

  1. MANIMARAN May 19, 2020 11:38 pm

Leave a Reply to MANIMARAN Cancel reply