நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அபிஜித் பானர்ஜி, இந்திய பிரதமர் நரேந்திர மோதியை நேரில் சந்தித்தார்.

2019-ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் ஒருவரான அபிஜித் பானர்ஜி, இந்திய பிரதமர் நரேந்திர மோதியை இன்று நேரில் சந்தித்தார்.

‘அபிஜித் பானர்ஜியுடனான சந்திப்பு வெகு சிறப்பாக அமைந்தது. இருவருக்கும் இடையே, ஆரோக்கியமான மற்றும் விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின் வாயிலாக சாமானியர்களின் அதிகார மேம்பாட்டின் மீது அபிஜித் கொண்டுள்ள ஆர்வம் தெளிவாக வெளிப்பட்டது. அபிஜித்தின் சாதனைகளைக் கண்டு இந்தியா பெருமிதம் கொள்கிறது. அவருடைய எதிர்காலப் பணிகள் சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்’. என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

-எஸ்.சதிஸ் சர்மா.

 

 

One Response

  1. MANIMARAN October 27, 2019 2:00 am

Leave a Reply to MANIMARAN Cancel reply