திமுகவிற்கு அரவிந்த் கேஜ்ரிவால் ஆதரவு! இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சியிலிருந்து வெளியேறும் நிர்வாகிகள்!

அண்ணா நகர் நாகராஜ்

ஊழல் ஒழிப்பு, மக்கள் நலன் என்பதே எனது கொள்கையாக, ஆம் ஆத்மி கட்சியில் அண்ணா நகர் பிரிவு அடிப்படை உறுப்பினராக சேர்ந்து பணியாற்றினேன். ஆனால், ஆம் ஆத்மி கட்சி நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவால், திமுக ஆட்சியை “நல்லாட்சி” எனப் பாராட்டி, “ஐந்து ஆண்டுகள் ஓட்டு போடுங்கள்” என வாக்கு சேகரித்தது எனக்கு கடும் அதிர்ச்சியையும் மன வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இது ஊழலை ஒழிக்க வந்த கட்சியின் நோக்கத்திற்கு முற்றிலும் மாறுபட்டது. திமுக ஆட்சியில் நடைபெறும் கனிம வள கொள்ளை, மணல் கடத்தல், பாலியல் வன்கொடுமை, டெண்டர் கோடி ஊழல், அமைச்சர்கள் அட்டூழியங்கள், போதைப்பொருள் கடத்தல் போன்ற மக்கள் விரோத செயல்களை ஆதரிப்பது போன்றது.

வருங்காலத்தில் இத்தகைய ஊழல்களுக்கு ஆம் ஆத்மி கேள்வி கேட்க முடியாத சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.ஐயா கெஜ்ரிவால் அவர்களே, நீங்கள் தான் “திமுக நல்லாட்சி தருகிறது” எனக் கூறியுள்ளீர்கள். உங்கள் நண்பர் ஸ்டாலின் அவர்களின் ஊழல்களுக்கு முதலில் நீங்களே பொறுப்பேற்க வேண்டும்.

எனது கொள்கை “ஊழலுக்கு துணையாக இருக்க மாட்டேன்” என்பதால், இன்று முதல் ஆம் ஆத்மி கட்சியில் எந்த வேலையும் செயல்பட மாட்டேன் , அதிலிருந்து முற்றிலும் விலகுகிறேன்.தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொண்டு கேள்வி கேட்க வேண்டும் என வேண்டுகிறேன்.

இவ்வாறு ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி நாகராஜ் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கே. பி. சுகுமார்

Leave a Reply