திட்டக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அமைச்சர் சி.வெ.கணேசனை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பிரசாரத்தில் ஈடுபட்ட போது விசிக தொண்டர் ம.பொடையூரைச் சார்ந்த அஜித் என்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். நெஞ்சை உலுக்கிய இந்த பெருந் துயரம் கூட்டத்தில் இருந்த அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அந்த இளைஞனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மின்சாரம் தாக்கி உயிர் இழந்த அந்த இளைஞனின் குடும்பத்தினருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
–கே பி சுகுமார்.
