இராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 5 மீனவர்களுக்கு தூக்குத் தண்டனை: இலங்கை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

tn.fisherman
இராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிலாடுதீன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் 28-ம் தேதி மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 5 பேரை போதை பொருள் கடத்தியதாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு, கடந்த மூன்று ஆண்டுகளாக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி பத்மா சூரசேன இன்று தீர்ப்பு வழங்கினார்.

இதில், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் எமர்சன், வில்சன், அகஸ்டின், லாங்லெட், பிரசாந்த் ஆகிய 5 பேர் உள்பட இலங்கையைச் சேர்ந்த மூன்று மீனவர்களுக்கும் தூக்குத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

rameshwaram-fishers5 மீனவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டதையடுத்து, ராமேஸ்வரத்தில் மீனவர்களின் போராட்டம் வெடித்துள்ளது.

rameshwaram-bus-fireஇந்நிலையில், பாம்பனில் இருந்து ராமேஸ்வரத்திற்கு அரசு பேருந்து ஒன்று இன்று மாலை சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து தங்கச்சிமடம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது அந்த பஸ்சுக்கு தீ வைக்கப்பட்டது. அரசு பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டதால் பதட்டம் நிலவுகிறது. இதனால் ஏற்பட்ட பதட்டம் காரணமாக, அப்பகுதியில் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

ஜெ.ஜெயலலிதா தமிழக முதல்வராக இல்லாத இத்தருணத்தில், இலங்கை உயர்நீதி மன்றம் இன்று வழங்கியுள்ள இந்த பயங்கரமான தீர்ப்புக்கு பின்னால், தமிழக அரசிற்கு எதிரான மகிந்த ராஜபட்ஷேவின் மிகப்பெரிய சதித்திட்டம் மறைந்திருக்கிறது.

அது என்னவென்றால், இந்த காலக்கட்டத்தில் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கினால், இதைக் கேட்டு தமிழக மக்களும், தமிழக மீனவர்களும் கொதித்து எழுவார்கள். இதனால் தமிழகத்தில் வன்முறைகள் உருவாகும். பொதுச் சொத்துக்களுக்கு சேதம் உண்டாகும்.

இதன் மூலம் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டது என்ற குற்றச்சாட்டை முன் நிறுத்தி, எப்படியாவது தமிழக அரசை கலைத்துவிட வேண்டும் என்பதுதான் இவர்களின் திட்டம். தமிழகத்தை சேர்ந்த சர்வதேச தரகர் சுப்ரமணியன் சுவாமியின் யோசனைப்படிதான் இந்த சதித்திட்டம் அரங்கேறியிருக்கிறது.

எனவே, இவ்விசியத்தில் தமிழக அரசு மிகவும் எச்சரிக்கையாகவும், விழிப்பாகவும் இருப்பது நல்லது.

-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in