ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணையை வந்தடைந்தது.

????????????? ????????????? ????????????? ?????????????

Kallanaiகாவிரி தாய்க்கு நன்றி சொல்லும் விதமாக தமிழகத்தில் காவிரியாற்றின் கரையோரம் ஆண்டு தோறும் ஆடி மாதம் 18-ம் தேதி ஆடிப்பெருக்கு விழாவை மக்கள் மிக விமரிசையாக கொண்டாடுவது வழக்கம்.

ஆடிப்பெருக்கன்று கன்னிப்பெண்கள் திருமணம் நடக்க வேண்டியும்திருமணமான பெண்கள் தாலிபாக்கியம் நிலைக்கவும், விவசாயிகள் விவசாயம் பெருகி வாழ்வு செழிக்கவும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை வேண்டியும் காவிரித் தாயை வழிபடுவது வழக்கம்.

குறிப்பாக புதுமணத் தம்பதிகள் தங்களது வாழ்வில் எல்லா செல்வமும் பெற்று பெருவாழ்வு வாழ அனைத்து வளங்களும் கிடைக்க வேண்டி காவிரி அன்னையை வழிபட்டு வருவது வழக்கம்

வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட உள்ள நிலையில்மேட்டூர் அணையிலிருந்து  கூடுதலாகத் தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா கடந்த 24-ம் தேதி உத்தரவிட்டிருந்தார்.

TN.CM JJ

kh©òäF jäHf Kjyik¢r® bršé b# b#ayèjh mt®fë‹ m¿¡if - 11

இதைத் தொடர்ந்து, மேட்டூர் அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக விடுவிக்கப்பட்டு வரும் 2000 கன அடி நீருடன்ஜூலை 25-ம் தேதி முதல் வினாடிக்கு கூடுதலாக 3000 கனஅடி நீர் திறக்கப்பட்டது.

இந்த தண்ணீர் கரூர் வழியாக வினாடிக்கு 4100 கனஅடி வீதம் திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வந்து சேர்ந்தது.

இதையடுத்து முக்கொம்பு மேலணையிலிருந்து பொதுப்பணித் துறை அலுவலர்கள் மதகுகள் வழியாக வினாடிக்கு 4100 கனஅடிதண்ணீரைத் திறந்துவிட்டனர். இந்த தண்ணீர் இன்று கல்லணையை வந்தடைந்தது.

கல்லணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் வழியாக அனைத்து பகுதிகளுக்கும் சென்றடையும்.

 -டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com