இரண்டாம் உலகப்போரின் போது உயிரிழந்த தமிழர்களுக்கு தமிழ் மரபுப்படி “நடுகல்”!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.10 இலட்சம் நிதியுதவி

இரண்டாம் உலகப்போரின்போது சியாம் தாய்லாந்து – பர்மா ரயில்பாதை அமைக்கும் பணியில் உயிரிழந்த 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்களுக்கு தமிழ் மரபுப்படி “நடுகல்” அமைக்கும் பணிகளுக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.10 இலட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

அயலகத் தமிழர் நலத்துறையின் சார்பில் கடந்த 12.1.2024 அன்று சென்னையில் கொண்டாடப்பட்ட அயலகத் தமிழர் தின விழாவில் அயல் நாடுகளிலிருந்து வருகைபுரிந்த தமிழர்களுக்கு பாராட்டுகளும், பரிசுகளும் வழங்கிப் பெருமைப்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாய்லாய்ந்து தமிழ்ச் சங்கத்தினர் விடுத்த கோரிக்கையினை ஏற்று, இரண்டாம் உலகப் போரின் போது அங்கு உயிர்நீத்த தமிழர்களுக்கு “நடுகல்” அமைத்திட 10 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்கள்.

கே.பி.சுகுமார்

Leave a Reply