லட்சத்தீவில் இந்திய கடலோரக் காவல்படையின் உதவியுடன் சிறப்பு மருத்துவ முகாம்.

இந்திய கடலோரக் காவல்படை புதுதில்லி எய்ம்ஸ் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகத்தின் ஆதரவுடன் இணைந்து 2024 ஏப்ரல் 29 முதல் 30 வரை லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தின் தொலைதூர தீவுகளான கவரட்டி மற்றும் ஆண்ட்ரோத்தில் ஒரு சிறப்பு மருத்துவ முகாமை நடத்தியது. இந்த முகாமில் ஒவ்வொரு தீவிலுமிருந்து சுமார் 1,500 பேர் கலந்து கொண்டனர். மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையுடன் இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டன.

மகளிர் நோயியல், குழந்தை மருத்துவம், நரம்பியல், தோல் மருத்துவம், எலும்பியல் மற்றும் பல துறைகளைச் சேர்ந்த 15 சிறப்பு மருத்துவர்களைக் கொண்ட மருத்துவக் குழுவுக்கு தில்லி எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் எம்.சீனிவாஸ் தலைமை தாங்கினார். இந்த மருத்துவ முகாம் தொலைதூர தீவுகளில் சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவ காப்பீட்டை வழங்குவதிலும், துறை வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து உள்ளூர் மக்களுக்கு உதவுவதிலும் கவனம் செலுத்தியது.

இந்த முகாமை கடலோரக் காவல்படை பிராந்திய (மேற்கு) கமாண்டர் ஐஜி பீஷம் சர்மா, முதன்மை இயக்குநர் (மருத்துவ சேவைகள்) சர்ஜன் கொமடோர் திவ்யா கவுதம் உள்ளிட்டோர் முன்னிலையில் டாக்டர் எம்.சீனிவாஸ் தொடங்கி வைத்தார்.

திவாஹர்

Leave a Reply