ஆயுதப்படைகளின் மிகப்பெரிய பல் மருத்துவ நிறுவனமான ராணுவ பல் மருத்துவ மையம் (ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை) அதன் வெள்ளி விழாவைக் கொண்டாடுகிறது .

2024   மே 1 அன்று 25-வது நிறுவனத் தினத்தைக் கொண்டாடியது. இந்நிகழ்ச்சியில் மேற்குப் பகுதி தலைமை கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் எம்.கே.கட்டியார் பல் மருத்துவ மையத்தைப் பார்வையிட்டு சிறப்புத் தபால் உறையை வெளியிட்டார்.

இந்த விழாவில் பல் மருத்துவ சேவைகள் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் வினீத் சர்மா மற்றும் மையத்தின் முன்னாள் தளபதிகள் கலந்து கொண்டனர். பல் மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி, நோயாளிகுள் பராமரிப்பு ஆகியவற்றில் முன்னணி நிறுவனமாக மாறுவதற்கு ராணுவ பல் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை மையத்தின் அனைத்து சாதனைகள் மற்றும் முயற்சிகளை பிரிகேடியர் எஸ்.எஸ்.சோப்ரா விளக்கினார்.

ராணுவ பல் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை மையம் என்பது ஆயுதப் படைகளின் மிகப்பெரிய பல் மருத்துவ நிறுவனமாகும். இது பல் மருத்துவத்தின் ஐந்து சிறப்புப் பிரிவுகளில் முதுநிலைப் பயிற்சியை வழங்குகிறது

மேற்குப் பகுதியில் உள்ள அனைத்து ராணுவ அணிகளுடனும் கலந்துரையாடிய மேற்குப் பகுதி தலைமை கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் எம்.கே.கட்டியார், பல் மருத்துவ மையத்தால் வழங்கப்பட்ட சிறந்த சேவையையும் பாராட்டினார். படைவீரர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் முன்னாள் வீரர்களுக்கு அதிநவீன உயர் நிலைக் கவனிப்பை தொடர்ந்து வழங்குமாறு அனைத்துத் தரப்பினரையும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும் ஒவ்வொருவரும் இப்போதுள்ள தொழில்முறை ஆர்வத்துடன் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார். நோயாளிகள் பராமரிப்பு வசதிகளில் தொடர்ச்சியான முன்னேற்றங்களுக்காக ராணுவ பல் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை மையத்தின் ஊழியர்களை அவர் பாராட்டினார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply