விசாகப்பட்டினத்தில் உள்ள இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில் இந்திய கடற்படைக்கான கப்பலுக்கு எஃகு வெட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது .

ஐந்து கடற்படை கப்பல்களுக்கு (எஃப்எஸ்எஸ்) முதல் எஃகு வெட்டும் (ஸ்டீல் கட்டிங்) விழா இன்று (ஏப்ரல் 10, 2024) விசாகப்பட்டினத்தில் உள்ள இந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட்டில்  நடைபெற்றது. பாதுகாப்புத் துறைச் செயலாளர் திரு கிரிதர் அரமனே முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கிழக்கு கடற்படை  கட்டளை கொடி அதிகாரி வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தர்கர், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கடற்படைக்கான ஐந்து கப்பல்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் ஹெச்.எஸ்.எல் நிறுவனத்துடன், கடற்படை ஆகஸ்ட் 2023-ல் கையெழுத்திட்டது. இந்தக் கப்பல்களை 2027-ம் ஆண்டில் கடற்படைக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கப்பல்கள் கடற்படையில் இணைக்கப்படும்போது, கடற்படையின் திறன்கள் மேலும் வலுப்படும். 40,000 டன்களுக்கும் அதிகமான எடைத் திறன்களைக் கொண்ட இந்த கப்பல்கள் எரிபொருள், நீர், வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்று கடலில்  நீண்ட காலம் செயல்படும் தன்மை கொண்டவையாகும்.  இக்கப்பல்கள் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.  

முற்றிலும் உள்நாட்டு வடிவமைப்பில் உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்தே பெரும்பாலான உபகரணங்களை வாங்கி இந்தக் கப்பல்கள் வடிவமைக்கப்படுகின்றன.

Leave a Reply