சுரங்கம் மற்றும் கனிம பதப்படுத்துதலில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை மேம்படுத்த சுரங்க அமைச்சகம் ஸ்டார்ட்-அப் வெபினாருக்கு ஏற்பாடு .

சுரங்கம் மற்றும் கனிம செயலாக்கத்தில் ஆராய்ச்சி மற்றும் புதுமையை முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்புகளை ஆராய்வதற்காக, சுரங்கம் மற்றும் கனிமவியல் துறையில் பணிபுரியும் ஸ்டார்ட்-அப்கள், எம்.எஸ்.எம்.இ.க்கள் மற்றும் தனிநபர் கண்டுபிடிப்பாளர்களுக்காக மத்திய சுரங்க அமைச்சகம் இன்று ஒரு சிறப்பு வெபினார் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.  வெபினாரை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலாளர் பேராசிரியர் அபய் கரண்டிகர் தொடங்கி வைத்தார். சுரங்கத் துறை செயலாளர் திரு வி.எல்.காந்தா ராவ் முக்கிய உரையாற்றினார்.

சுரங்க அமைச்சகம் 2023 நவம்பரில் சுரங்கம், கனிம செயலாக்கம், உலோகவியல் மற்றும் மறுசுழற்சி துறையில் ஸ்டார்ட்-அப்கள் மற்றும் எம்.எஸ்.எம்.இ.களில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தலை தொடங்கியது. கனிமத் துறை, சுரங்கத் துறையில் பணிபுரியும் ஸ்டார்ட்-அப் மற்றும் எம்எஸ்எம்இ-க்களில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு நிதியளிப்பதற்காக, சுரங்க அமைச்சகம் இதனை நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தியது.  இது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கும் வணிகமயமாக்கலுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வெபினாரில் ஸ்டார்ட்அப்கள், நிபுணர்கள் மற்றும் தொழில்துறை உட்பட 200-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

வெபினாரின் போது, பங்கேற்பாளர்கள் சுரங்கம் மற்றும் கனிம செயலாக்கத்தில் சமீபத்திய போக்குகள், சவால்கள் மற்றும் வாய்ப்புகளைச் சுற்றியுள்ள நுண்ணறிவு விவாதங்களில் ஈடுபட்டனர். ஜவஹர்லால் நேரு அலுமினியம் ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் வடிவமைப்பு மையத்தின் இயக்குனர் டாக்டர் அனுபம் அக்னிஹோத்ரி, மையத்தின் செயல்பாடு மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து விளக்கக்காட்சியை வழங்கினார். வேதாந்தா ஸ்பார்க் இனிஷியேட்டிவ்ஸ் தலைவர் அமிதேஷ் சின்ஹா உள்ளிட்டோர் சுரங்கத் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களைக் கையாள்வதில் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.  சுரங்கத் துறையில் செயற்கை நுண்ணறிவின் பங்கு குறித்து மும்பை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியர் அசிம் திவாரி விளக்கினார்.

திவாஹர்

Leave a Reply