சுமார் 100 சிறைச்சாலைகளில் உணவுப் பாதுகாப்பு சிறப்பாக உள்ளதாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் சான்றளித்துள்ளது.

சுமார் 100 சிறைச்சாலைகளில்  உணவுப் பாதுகாப்பு சிறப்பாக உள்ளதாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் சான்றளித்துள்ளது.

இந்த முயற்சியில் திகார் சிறை (தில்லி), மத்திய சிறை கயா (பீகார்), நவீன மத்திய சிறை (பஞ்சாப்), மத்திய சிறை ரேவா (மத்தியப் பிரதேசம்) மற்றும் பல மாவட்ட மற்றும் மண்டல சிறைகள் உள்ளிட்ட நாட்டின் சில முக்கிய சிறைகள் சான்றிதழ் பெற்றன. அதிக எண்ணிக்கையிலான சான்றளிக்கப்பட்ட சிறைகள் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ளன. அதைத் தொடர்ந்து பஞ்சாப், பீகார், மத்தியப் பிரதேசம் மாநிலங்களில்  உள்ளன.

கைதிகள் மற்றும் சிறை ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் பாதுகாப்பான, சத்தான உணவை உறுதி செய்வதற்கான அதன் உறுதிப்பாட்டை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் சுட்டிக் காட்டுகிறது. நாடு முழுவதும் 2,900 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் தற்போது உண்பதற்கேற்ற சரியான  வளாகங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன, இது இந்த வளாகங்களில் பணிபுரியும் தனிநபர்களின் வாழ்க்கையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

திவாஹர்

Leave a Reply