சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவை அடைவதற்கான தேசிய இயக்கத்தைப் பிரதமர் தீவிரப்படுத்துகிறார்.

இந்தியா தற்போது சமையல் எண்ணெயின் நிகர இறக்குமதியாளராக உள்ளது. மொத்த சமையல் எண்ணெயில் 57% பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. சமையல் எண்ணெயில் பற்றாக்குறை நமது அந்நிய செலாவணியை 20.56 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு  எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எண்ணெய் வித்துக்கள் மற்றும் பாமாயிலை ஊக்குவிப்பதன் மூலம் சமையல் எண்ணெய் உற்பத்தியில் நாடு தன்னிறைவு பெறுவது மிகவும் முக்கியமானது.

அருணாச்சலப் பிரதேசத்திற்கு மேற்கொண்டபோது, சமையல் எண்ணெய் உற்பத்தியில் இந்தியாவின் தற்சார்பு என்பதை பிரதமர் சுட்டிக் காட்டினார். வடகிழக்குப் பகுதியை மையமாகக் கொண்டு மத்திய அரசு மேற்கொண்ட சிறப்பு பிரச்சாரமான பாமாயில் இயக்கத்தை எடுத்துரைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்த இயக்கத்தின் கீழ் முதல் எண்ணெய் ஆலையை திறந்து வைத்தார். “பாமாயில் இயக்கம் சமையல் எண்ணெய் துறையில் இந்தியாவை தற்சார்பாக மாற்றுவதுடன் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும்” என்று பிரதமர் கூறினார். பனை சாகுபடியை மேற்கொண்ட விவசாயிகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply