ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 114ஏ-யில் டவர் சவுக் முதல் பாசுகிநாத் வரையிலான பிரிவை நான்கு வழிச்சாலையாக மாற்ற ரூ.292.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

.மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜார்க்கண்டில், தும்கா மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 114 ஏ டவர் சவுக் முதல் பாசுகிநாத் வரையிலான பிரிவை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு எச்ஏஎஸ் முறையில் ரூ. 292.65 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் தியோகர் மற்றும் பாசுகிநாத் ஆகிய முக்கியமான மதத் தலங்களின் போக்குவரத்தை எளிதாக்கும் என்று அவர் கூறினார். ஷ்ராவணி மேளாவின் போது போக்குவரத்துக்கு தற்போதைய வண்டிப்பாதை போதுமானதாக இல்லை. பக்தர்கள் தியோகர் மற்றும் பாசுகிநாத் செல்ல இந்த வழியைப் பயன்படுத்துகின்றனர். எனவே, தற்போதுள்ள இருவழிச் சாலைகளை நான்கு வழிச்சாலைகளாக தரம் உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இது நெரிசலைக் குறைத்து, இப்பகுதியின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும்.

திவாஹர்

Leave a Reply