ஃப்ளை 91- எனும் நிறுவனத்தின் புதிய விமானச் சேவையை ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி வைத்தார் .

மத்திய சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எஃகுத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம்.சிந்தியா இன்று கோவாவின் மனோகர் சர்வதேச விமான நிலையம் மற்றும் லட்சத்தீவின் அகத்தி தீவுகள் இடையே ஃப்ளை 91 என்ற நிறுவனத்தின் பிராந்திய விமான சேவையை தொடங்கி வைத்தார்.

ஜோதிராதித்ய சிந்தியா தனது தொடக்க உரையில், நமது நாட்டில் முன்பு விமான நிறுவனங்கள் மூடப்படுவது மற்றும் திவாலாகும் நிலை ஆகியவை செய்திகளாக இருந்தன என்று கூறினார். கடந்த 10 ஆண்டுகளில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் இந்தத் தொழிலுக்கு ஒரு புதிய விடியல் கொண்டு வரப்பட்டது. இதன் விளைவாக ஆறு புதிய பிராந்திய விமான நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. நாட்டில் சிவில் விமானப் போக்குவரத்தின் பன்முக வளர்ச்சியையும் திரு சிந்தியா எடுத்துரைத்தார். உடான் திட்டத்தின் மூலம் 2-ம் நிலை மற்றும் 3-ம் நிலை நகரங்களை இணைப்பதற்கான அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய அவர், 2030-ம் ஆண்டில் விமானத் துறை தனது உள்நாட்டு போக்குவரத்தை 30 கோடியாக உயர்த்துவதை எதிர்நோக்கியுள்ளது.

மனோகர் சர்வதேச விமான நிலையம், கோவா மற்றும் பெங்களூரு, ஹைதராபாத், ஜல்கான், அகத்தி, புனே, நாந்தேட் மற்றும் பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் புனேவிலிருந்து சிந்துதுர்க், ஜல்கான், நாந்தேட் மற்றும் கோவா இடையே விமானங்கள் சேவை 2024 மார்ச் 18 முதல் நடைமுறைக்கு வரும் என்று விமான நிறுவனங்கள் தெரிவித்தன.

இந்த புதிய இணைப்புகள் நாடு முழுவதும் மேம்படுத்தப்பட்ட இணைப்புக்கான தேவையை பூர்த்தி செய்யும் மற்றும் பல்வேறு பிராந்தியங்களின் அணுகலை அதிகரிக்கும். இது சுற்றுலாவை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், வர்த்தகத்தையும் அதிகரித்து பயணிகளுக்கு மலிவான, சரியான நேரத்தில், பாதுகாப்பான மற்றும் தொந்தரவு இல்லாத பயண அனுபவத்தை வழங்குவதற்கான அரசின் உறுதிப்பாட்டிற்கு பலம் அளிக்கும்.

இந்த நிகழ்ச்சியில் ஃப்ளை91 தலைவர் திரு ஹர்ஷா ராகவன், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு அசங்பா சுபா ஆவோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திவாஹர்

Leave a Reply