மத்திய ரிசர்வ் வங்கி 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.

நாட்டில் தவறான வழிகளில் பணம் சம்பாதித்து, பதுக்கி வைத்து, வரி ஏய்ப்பு செய்து

வாழ்க்கை வாழ்பவர்களுக்கு பாதகமே சாமானியர்களுக்கும், நேர்மையானவர்களுக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை

இது போன்ற நல்ல நடவடிக்கைகளால் சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு நல்லது நடக்கும். நாட்டின் வளர்ச்சியும் உறுதி செய்யப்படும்.

மத்திய ரிசர்வ் வங்கி 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற
வெளியிட்டிருக்கும் அறிவிப்பானது நாட்டு மக்கள், நாட்டின் முன்னேற்றம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது.

நம் நாடு இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நாட்டில் தவறான வழிகளில் பணம் சம்பாதித்து, பதுக்கி வைத்து, சுக வாழ்க்கை வாழ்ந்தவர்கள் ஏராளம்.

அதாவது ஊழல், லஞ்சம், போதைப்பொருட்கள் கடத்தல், ஹவாலா மோசடி போன்ற குறுக்கு வழியில் பணத்தை சம்பாதித்து வைத்திருப்பவர்களுக்கு இந்த அறிவிப்பு பாதகமே.

அதே சமயம் இந்த அறிவிப்பால்
நியாயமாக நேர்மையாக செயல்படுபவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

மொத்தத்தில் இந்த அறிவிப்பானது பண ஆசையில் தவறாக, குறுக்கு வழியில் செயல்பட நினைப்பவர்களுக்கு பொருத்தமான ஒன்று.

குறிப்பாக சாமானியர்களும், நல்லவர்களும் இந்த அறிவிப்பால்
பாதிக்கப்பட மாட்டார்கள்.

தன் குடும்பத்திற்கும், தன் குடும்பத்தின் வருங்கால சந்ததியினருக்கும் தேவைக்கு அதிகமாக தவறான வழியில் பணத்தை சம்பாதித்து, வெளிநாடுகளிலும் பணத்தை முதலீடு செய்து, சொகுசு வாழ்க்கை வாழ நினைப்பவர்களுக்கு ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையானது சரியானதாக அமைந்து நாட்டு மக்களுக்கும், நாட்டிற்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் பெரும் பயனளிக்கும்.

எனவே ரிசர்வ் வங்கியின் 2,000 ரூபாய் நோட்டு சம்பந்தமான அறிவிப்பை த.மா.கா சார்பில் வரவேற்று, சாதாரணமானவர்கள், நேர்மையானவர்கள், நல்லவர்கள் வாழ்வில் மேம்பட இது போன்ற நல்ல நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply