செகந்திராபாதுடன் விசாகப்பட்டினத்தை இணைக்கும் வந்தே பாரத் விரைவு ரயிலைக் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

“ஒரே மாதிரியான பாரம்பரியத்தைக் கொண்ட தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தை வந்தே பாரத் இணைக்கும்”

” எல்லாவற்றிலும் சிறந்ததை இந்தியா விரும்புகிறது என்பதை வந்தே பாரத் விரைவு ரயில் குறிக்கிறது”

“வந்தே பாரத் புதிய இந்தியாவின் திறன் மற்றும் உறுதிப்பாட்டின் சின்னம்”

“இணைப்பு தொடர்பான உள்கட்டமைப்பு இரண்டு இடங்களை இணைப்பது மட்டுமல்லாமல் கனவுகளை உண்மையான களத்துடன் இணைத்து அனைவரின் வளர்ச்சியை உறுதி செய்கிறது”

“எங்கெல்லாம் கதி (வேகம்) இருக்கிறதோ அங்கெல்லாம்  பிரகதி (முன்னேற்றம்) இருக்கிறது. முன்னேற்றம் ஏற்படும் போதெல்லாம் செழிப்பு உறுதி”

“கடந்த 7-8 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், வரும் 7-8 ஆண்டுகளில் இந்திய ரயில்வேயை மாற்றும்”

புதுதில்லி, ஜனவரி 15, 2023

செகந்திராபாத் – விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த ரயில் இந்திய இரயில்வே அறிமுகப்படுத்திய எட்டாவது வந்தே பாரத் விரைவு ரயில் ஆகும். மேலும், தெலங்கானா, ஆந்திரா ஆகிய இரண்டு மாநிலங்களை இணைக்கும் முதலாவது வந்தே பாரத் ரயில் இதுவாகும்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி, விழாக்கள் கொண்டாடப்படும் இந்த மங்களகரமான சூழலில், ஆந்திரா மற்றும் தெலங்கானாவின் பாரம்பரியத்தை இணைக்கும் மாபெரும் பரிசை இரு மாநிலங்களும் பெறுவதாகக் குறிப்பிட்டார். பண்டிகைகளை ஒட்டி, இரு மாநில மக்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார். ராணுவ தினத்தை முன்னிட்டு ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்திய அவர், இந்திய ராணுவம் வீரத்திற்குப் பெயர் பெற்றது எனக் கூறினார்.

நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் இணைக்கும் பண்டிகைகளைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர், இந்தியாவின் பல்வேறு பகுதிகளை புரிந்து கொள்ளவும், அறிந்து கொள்ளவும் இணைக்கவும் வாய்ப்பளிக்கும் வகையில், இந்திய ரயில்வேயும் நாட்டின் நீளம் மற்றும் அகலங்களைக் கடந்து ஒரே பாரதமாக இணைப்பதாக் குறிப்பிட்டார்.

வந்தே பாரத் விரைவு ரயில் பயணிகளுக்கு பெரிதும் பயனளிக்கும் என்பதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், செகந்திராபாத் – விசாகப்பட்டினம் இடையிலான பயண நேரம் குறையும் என்றும் தெரிவித்தார்.

“வந்தே பாரத் புதிய இந்தியாவின் திறன் மற்றும் உறுதிப்பாட்டின் சின்னம்” என்று கூறிய பிரதமர், “இது விரைவான வளர்ச்சியின் பாதையைத் தேர்ந்தெடுத்த இந்தியாவின் சின்னம்” என்றார். தனது கனவுகள் மற்றும் லட்சியத்தை நோக்கி ஆர்வமாக இருக்கும் இந்தியாவை, தனது இலக்கை அடைய விரும்பும் இந்தியாவை, சிறந்து விளங்க பாடுபடும் இந்தியாவை, தனது குடிமக்களுக்கு சிறந்ததை வழங்க விரும்பும் இந்தியாவை இந்த ரயில் பிரதிபலிக்கிறது என்றும் பிரதமர் கூறினார். அடிமை மனப்பான்மையை உடைத்து தற்சார்பை நோக்கி இந்தியா செல்வதாகவும் பிரதமர் கூறினார்.

வந்தே பாரத் ரயில்கள் தொடர்பாக நடைபெற்று வரும் பணிகளின் வேகத்தையும் பிரதமர் சுட்டிக் காட்டினார். இந்த ஆண்டின் முதல் 15 நாட்களுக்குள் இரண்டாவது வந்தே பாரத் ரயில் தொடங்கி வைக்கப்படுவதாகவும், இது களத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் வேகத்தைக் குறிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். வந்தே பாரத் ரயில்களின் உள்நாட்டுத் தயாரிப்பையும், மக்கள் மனதில் அவற்றின் தாக்கத்தையும் அவர் எடுத்துரைத்தார். பூமியை 58 முறை சுற்றி வருவதற்குச் சமமாக, 7 வந்தே பாரத் ரயில்கள் 23 லட்சம் கிலோமீட்டர் தூரத்தை கடந்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். வந்தே பாரத் ரயிலில் இதுவரை 40 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்துள்ளனர் எனவும் பிரதமர்குறிப்பிட்டார்.

“இணைப்பு தொடர்பான உட்கட்டமைப்பு இரண்டு இடங்களை இணைப்பது மட்டுமல்லாமல் கனவுகளை யதார்த்தத்துடனும், உற்பத்தியை சந்தையுடனும், திறமையை சரியான தளத்துடனும்  இணைப்பதாகப் பிரதமர் கூறினார். வளர்ச்சியின் சாத்தியங்களை இணைப்பு விரிவுபடுத்துவதைப்  பிரதமர் சுட்டிக்காட்டினார். “எங்கெல்லாம் கதி (வேகம்) இருக்கிறதோ அங்கே பிரகதி (முன்னேற்றம்) இருக்கிறது எனவும், முன்னேற்றம் ஏற்படும் போதெல்லாம் செழிப்பு உறுதி” என்றும் பிரதமர் கூறினார்.

நவீன கால இணைப்பின் பலன்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு பயன்பட்ட காலத்தை நினைவு கூர்ந்த பிரதமர், விலையுயர்ந்த போக்குவரத்து அதிக நேரத்தை வீணடித்ததால் பெரும்பாலான மக்கள் அவதிப்பட்டதாகக் கூறினார். வந்தே பாரத் ரயில், அந்த சிந்தனையை விட்டு விலகி, வேகம் மற்றும் முன்னேற்றத்துடன் அனைவரையும் இணைக்கும் பார்வைக்கு எடுத்துக்காட்டாக இருப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். நல்ல மற்றும் நேர்மையான நோக்கத்துடன், இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டபோது, ரயில்வேயின் மோசமான பிம்பங்களும், அணுகுமுறையும் மாறியது என்றும், கடந்த எட்டு ஆண்டுகளில், இதுவே இந்திய ரயில்வேயை மாற்றியமைத்த மந்திரம் என்றும் பிரதமர் எடுத்துரைத்தார்.

திவாஹர்

Leave a Reply