கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு மேம்படுத்தப்பட்ட உயர்தர எரிபொருளை ரஷ்யாவின் ரோசட்டாம் அணுசக்திக் கழகம் வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு மேம்படுத்தப்பட்ட உயர்தர எரிபொருளை ரஷ்யாவின் ரோசட்டாம் அணுசக்திக் கழகம் வழங்கியுள்ளதாக மத்திய அறிவியல்,  தொழில்நுட்பம்,  புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை   இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த டாக்டர் ஜிதேந்திர சிங், ரஷ்ய கூட்டமைப்பிடமிருந்து 2022, மே மற்றும் ஜூன் மாத இடைவெளியில்,டிவிஎஸ்-2எம் ரக எரிபொருளின் முதலாவது  தொகுப்பு கிடைக்கப்பெற்றது. இது முதலாவது அலகில் தற்போது நல்ல நிலையில் இயங்கி வருகிறது.

யுடிவிஎஸ் ரக எரிபொருள் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் இரண்டாவது அலகில் 12 மாதங்கள் செயல்படும் நிலையில் டிவிஎஸ் – 2எம் ரக எரிபொருள் 18 மாதங்கள் செயல்படும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

திவாஹர்

Leave a Reply