புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறையில், புதிய சந்தைகளை உருவாக்கி மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறையில், புதிய சந்தைகளை உருவாக்கி மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.வழக்கமான வழிமுறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்தல், மாநிலங்களுக்கு இடையே சூரியசக்தி, காற்றாலை, மின்சாரத் திட்டங்களை 2025 ஜூன் 30-ம் தேதிக்குள் உருவாக்குவதற்கான கட்டணங்களை தள்ளுபடி செய்தல், 2029-30-ஆம் ஆண்டு வரை புதுப்பிக்கத்தக்க கொள்முதலுக்கான திட்டத்தைப் பிரகடனப்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை உருவாக்குபவர்களுக்கு நிலம் மற்றும் மின்சார விநியோகத்தை வழங்குவதற்கான பிரமாண்டமான புதுப்பிக்கத்தக்க எரிசச்தி பூங்காக்களை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு முன்முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது.மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர் திரு ஆர் கே சிங் மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

திவாஹர்

Leave a Reply