ஏழு அதிவேக ரயில் பாதைகளுக்கான கணக்கெடுப்பு மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இரு மிதமான அதி வேக ரயில் திட்டத்திற்காக ‘கொள்கையளவில்’ ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது

தற்போது, ஜப்பான் அரசின்  தொழில்நுட்பம் மற்றும் நிதியுதவியுடன், இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட ஒரே அதிவேக ரயில் திட்டம் மும்பை-அகமதாபாத் அதி வேக ரயில் திட்டம். மேலும், கீழே கொடுக்கப்பட்டுள்ள ஏழு அதி வேக ரயில் பாதைகளுக்கான கணக்கெடுப்பு மற்றும் திட்ட அறிக்கையின் தயாரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1. டெல்லி-வாரணாசி

2. டெல்லி-அகமதாபாத்

3. மும்பை-நாக்பூர்

4. மும்பை-ஐதராபாத்

5. சென்னை-பெங்களூரு-மைசூர்

6. டெல்லி-சண்டிகர்-அம்ர்ட்ஸர்

7. வாரணாசி-ஹௌரா

மேலும், கீழ்காணும் மிதமான அதி வேக ரயில் பாதை திட்டங்களுக்கும் ‌அரசு‌ கொள்கையளவில் ஒப்புதல் அளித்துள்ளது.

 1. திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை மிதமான வேக ரயில் குறுகிய ரயில் பாதை திட்டம்

 2. புனே- நாசிக் மிதமான வேக ரயில் அகல ரயில் பாதை திட்டம்

இவ்விரு மிதமான அதி வேக ரயில் திட்டமும், கேரள அரசின் கேரள ரயில் வளர்ச்சி நிறுவனம் மற்றும் மகாராஷ்டிரா அரசின் மகாராஷ்டிரா ரயில் வளர்ச்சி நிறுவனத்தின் கூட்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்படும்.

எம்.பிரபாகரன்

Leave a Reply