திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காவிரி பாலம் கல்லணை ரோடு அருகே போக்குவரத்து நெரிசல்!-இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த பெண் நிலை தடுமாறி விழுந்து காயம்!

திருச்சி காவிரி பாலம் மராமத்துப் பணி நடைபெற்று வருவதால், அந்த வழித்தடத்தில் போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாகத்தான் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இதனால் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் திருச்சி – கல்லணை சாலையில் மணல் லாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளும், வேலைக்கு செல்லும் நபர்களும், கல்லணைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்ரீரங்கத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் திருச்சியில் உள்ள பள்ளிக்கு பணிக்குச் சென்ற ஆசிரியை ஒருவர் இன்று காலை 9 30 மணியளவில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காவிரி பாலம் கல்லணை ரோடு அருகே சென்றபோது கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி, தான் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தோடு நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது முகம், நெற்றி மற்றும் உதடுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. அதிர்ச்சியில் மயக்கமானார். அவரால் எழுந்து நடக்க முடியாத நிலை ஏற்பட்டது.

அருகில் இருந்த நபர்கள் அவரை மீட்டு ஆட்டோ மூலம் அருகில் இருக்கும் ஜீ.வி.என். ரிவர் சைடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உறவினர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. காயம் அடைந்த அந்த பெண்; ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரின் உறவினர் என்பது நமது விசாரணையில் தெரிய வருகிறது.

–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail

இதுதொடர்பான முந்தைய செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.

https://www.ullatchithagaval.com/2022/11/30/81039

–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply