கத்துவாவில் சக்சம் ஏற்பாடு செய்த மாற்றுத்திறனாளி மாநாட்டில் டாக்டர். ஜிதேந்திர சிங் பங்கேற்பு.

முந்தைய அரசுகளால் இயல்பு சமூகத்தில் இருந்து ஒதுக்கப்பட்டவர்களுக்காக, குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்காக  பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அர்ப்பணிப்புடன் இருப்பதாக மத்திய அறிவியல், தொழில்நுட்பம் ( தனிப்பொறுப்பு), புவி அறிவியல் ( தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர்கள் நலன், பொதுமக்கள் குறைதீர்வு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளி துறை இணையமைச்சர் டாக்டர்  ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவில் சக்சம் என்ற சமூக அமைப்பின் முன்முயற்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘மாற்றுத்திறனாளி மகா சம்மேளன் ‘ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர்,  பிரதமர் நரேந்திர மோடி இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற நாள் முதல்,  மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக அவர் சில கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்று  கூறினார். சிவில் சர்வீசஸ் தேர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கான கட்டண சலுகை, மாற்றுத்திறனாளிகள் இடஒதுக்கீடு 3 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக அதிகரிப்பு, ஓய்வூதியம் அதிகரிப்பு என பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகளுக்கான 15,000 பணியிடங்கள் சிறப்பு இயக்கத்தின் கீழ் நிரப்பப்பட்டன. இது பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் மட்டுமே சாத்தியமானது. ‘திவ்யாங்’ (தெய்வீக உடல்) என்ற வார்த்தையைப் பயன்படுத்த அவர் பரிந்துரைத்தார்.

 வரும் ஆண்டுகளில் வளர்ச்சியில் மற்ற அனைத்து வளர்ந்த நாடுகளையும் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடத்தை எட்டுவதற்கு, அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு நாட்டின் தேசிய வளர்ச்சியில் மாற்றுத்திறனாளிகளும் பங்களிக்க வேண்டும் என்றும் ஜிதேந்திர சிங் கூறினார். ‘சங்கல்ப் சே சித்தி’ பயணத்தின் மூலம், இந்தியா சுதந்திரத்தின் நூற்றாண்டை அடையும் போது அவர்களின் பங்களிப்பும் பொன்னான வார்த்தைகளில் எழுதப்படும்.

 நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் இடையூறாக இருந்த 1600க்கும் மேற்பட்ட காலாவதியான மற்றும் காலாவதியான சட்டங்களை இந்த அரசாங்கம் ரத்து செய்துள்ளதாகவும், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக இதுபோன்ற பல சட்டங்களும் திருத்தப்பட்டன. ரத்து செய்யப்பட்டன என்று ஜிதேந்திர சிங் கூறினார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply