காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே பன்னெடுங்கால பழமையான வரலாற்று, கலாச்சார, ஆன்மீக தொடர்பைப் பிரதமர் புதுப்பித்துள்ளார்!-மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர்.

காசிக்கும், தமிழகத்துக்கும் இடையே பன்னெடுங்காலமாக இருந்து வந்த பழமையான வரலாற்று, கலாச்சார, ஆன்மீக தொடர்பை பிரதமர் திரு நரேந்திர மோடி புதுப்பித்துள்ளார் என்று மத்திய தகவல், ஒலிபரப்பு,  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் கூறியுள்ளார். வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில், காசி தமிழ் சங்கமத்தின் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கிடையே பேசிய அமைச்சர், காசி தமிழ் சங்கமத்தை முன்னெடுத்த பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். பிரதமரின் முயற்சியால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2500 பேர் காசிக்கு வருகின்றனர் என்றார் அவர். இந்த நிகழ்வில் விளையாட்டுகளை சேர்த்து இளைஞர்கள் மத்தியில் உற்சாகத்தை பிரதமர் ஏற்படுத்தியுள்ளார். ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ விளையாட்டுக்கான முக்கியத்துவத்தை  எடுத்துரைக்கிறது. ஒரு விளையாட்டில் தோல்வி அல்லது வெற்றி என்பது முக்கியமல்ல, இந்த நட்பு போட்டி ஒருவரையொருவர் தெரிந்துகொள்ள உதவும் என்று அமைச்சர் கூறினார். ஒருவருக்கு மொழி தெரியாவிட்டாலும், ஒருவரையொருவர் தொடர்பு கொள்ளவும், தெரிந்து கொள்ளவும் முடியும் என்று அவர் கூறினார்.

அமிர்த காலத்தின் போது, நாம் உரிமைகளைத் தேடுவது மட்டுமல்லாமல் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்கை  தாக்கூர் சுட்டிக்காட்டினார். 

எம்.பிரபாகரன்

Leave a Reply