நாக்பூர் ரயில் நிலையத்தில், வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோதி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

நாக்பூர்-பிலாஸ்பூர் இடையேயான வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை,  நாக்பூர் ரயில் நிலையத்தின் 1ம் எண் பிளாட்பாரத்தில், பிரதமர் நரேந்திர மோதி இன்று  கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வந்தே பாரத் விரைவு ரயிலின் பெட்டிகள், மற்றும் அதில் பயணிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளையும் முன்னதாக பிரதமர் ஆய்வு செய்தார்.  வந்தே பாரத் விரைவு ரயிலின் கட்டுப்பாட்டு மையத்திலும், ஆய்வு மேற்கொண்ட திரு. மோடி, நாக்பூர் மற்றும் அஜ்னி ரயில் நிலையங்களின் மேம்பாட்டுப் பணிகளையும் பார்வையிட்டார்.

இந்த புதிய ரயில்சேவை மூலம் நாக்பூர்-பிலாஸ்பூர் இடையேயான பயண நேரம், 7-8  மணி நேரத்தில் இருந்து 5 மணி 30 நிமிடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நாக்பூர்-பிலாஸ்பூர் இடையேயான வந்தே பாரத் விரைவு ரயில் சேவையைக் கொடியசைத்துத் துவக்கிவைக்கப்பட்டது.  இதன் மூலம் ரயில்வே இணைப்பு கணிசமாக அதிகரிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமருடன், மகாராஷ்டிர முதலமைச்சர் திரு. ஏக்நாத் ஷிண்டே, அம்மாநில ஆளுநர் திரு. பகத்சிங் கோஷ்யாரி, துணை முதலமைச்சர் திரு. தேவேந்திர பட்னவிஸ், மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

திவாஹர்

Leave a Reply