கோவாவில் மத்திய அமைச்சர் ஸ்ரீபத் நாயக் 64 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

கோவாவில் மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிப் போக்குவரத்து மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் 64 பேருக்கு மத்திய அரசு துறை சார்ந்த பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

அப்போது பேசிய மத்திய அமைச்சர், “வேலைவாய்ப்புகளை அதிகளவில் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. பணி நியமனம் வழங்கும் மாபெரும் திட்டத்தின் மூலம் வேலை வாய்ப்புகள் அதிகரித்து, இளைஞர்களுக்கு உதவிகரமாக அமையும் என்று கூறினார்.

மத்திய அரசின் அனைத்துத் துறைகள் மற்றும் அமைச்சகங்களில் பணி புரிவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு, இணையதள ஒருங்கிணைப்பு வகுப்புகள் நடைபெறும். அதன் மூலம் அவர்கள் பயனடைவார்கள். மேலும், அவர்கள் தங்களது திறமைகளை வளர்க்க, பிற வகுப்புகளை igotkarmayogi.gov.in  -ல் கற்று கொள்ளலாம். 

பிரதமர் திரு.நரேந்திர மோடி பணி நியமனம் வழங்கும் மாபெரும் திட்டத்தின்கீழ், இரண்டாம் கட்டமாக 71,000 பேருக்கு காணொலி காட்சி மூலம் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

எஸ்.சதிஷ் சர்மா

Leave a Reply