பிரதமர் நரேந்திர மோதியின் நிலையான, முன்மாதிரியான ஆட்சி முறையானது, லாபக்கணக்கை விட கடன்தொகை அதிகரிக்கும் என்ற கொள்கையை ஒவ்வொரு ஆண்டும் முறியடித்து வருகிறது: மத்திய அமைச்சர் டாக்டர்.ஜிதேந்திர சிங்

பிரதமர் நரேந்திர மோதியின் நிலையான, நீடித்த ஆட்சி, லாபக்கணக்கை விட கடன்தொகை அதிகரிக்கும் என்ற கொள்கையை ஒவ்வொரு ஆண்டும் முறியடித்து வருகிறது என்று மத்திய பிரதமர் அலுவலகம், பணியாளர்கள், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியத்துறை இணை அமைச்சர் டாக்டர்.ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட மத்திய இணை அமைச்சர் டாக்டர்.ஜிதேந்திர சிங் பேசும் போது, “கடந்த 20 ஆண்டுகளில் மோடியின் முன்மாதிரியான ஆட்சி முறை பல்வேறு புதிய சவால்களை எதிர்நோக்கி வெற்றி கண்டு, பலம் பொருந்தியதாக மாறியுள்ளது. குஜராத்தின் முதல்வராக பிரதமர் திரு.மோடி பதவியேற்றவுடன், பூஜ் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  அந்த மிகப்பெரிய சவாலை திரு.மோடி அரசு எதிர்கொண்டு பாதிப்புகளிலிருந்து விடுபடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது” என்றார்.

“சமீபத்திய கொவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொண்ட திரு.மோடி அரசு புத்தம்புதிய சிந்தனைகளுடன் கூடிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வெற்றி கண்டு வருகிறது. பிரதமராக பதவியேற்ற மூன்று மாதங்களில் திரு.மோடி, சுயசான்றளிப்பு முறையை கொண்டு வந்ததன் விளைவாக சான்றிதழ்களுக்கு அத்தாட்சி வழங்குவதற்கு அதிகாரிகளை தேடி செல்லும் நடைமுறை மாறியது. தகவல்களை பெறுவதில் எவ்வித சிக்கலும் ஏற்படாமல் இருந்தாலே ஊழலை ஒழிக்க முடியும்” என்றார்.

எம் பிரபாகரன்

Leave a Reply