வேலைவாய்ப்பு விழாவின் மூலம் புதிய பணியாளர் சேர்ப்புக்கு 71,000 நியமன கடிதங்களை பிரதமர் நரேந்திர மோதி விநியோகித்தார்.

வேலைவாய்ப்பு விழாவின் மூலம் புதிய பணியாளர் சேர்ப்புக்கு 71,000 நியமன கடிதங்களை பிரதமர் நரேந்திர மோதி இன்று காணொலி காட்சி மூலம் விநியோகித்தார்.

புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு இணையதளத்தில் புத்தாக்க பயிற்சி வழங்க கர்மயோகி ப்ராரம்ப் இணைய தளத்தை தொடங்கிவைத்தார். இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் தேச வளர்ச்சியில் நேரடி பங்கேற்பிற்கு அர்த்தம் உள்ள வாய்ப்புகளை வழங்குவதிலும், வேலை வாய்ப்பை உருவாக்குவதிலும் இந்த விழா கிரியா ஊக்கியாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த அக்டோபர் தொடக்கத்தில் வேலை வாய்ப்பு விழாவின் மூலம் புதிதாக நியமனம் செய்யப்பட்டோருக்கு 75,000 நியமன கடிதங்கள் வழங்கப்பட்டன.

இந்த விழாவின் போது திரண்டிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர், இந்தியாவின் 45-க்கும் அதிகமான நகரங்களில் 71,000-க்கும் அதிகமான இளைஞர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கப்படுகின்றன என்றும் இதனால் புதிய சகாப்தத்தில் ஏராளமான குடும்பங்கள் மகிழ்ச்சியடையும் என்றும்  கூறினார். தந்தேராஸ் நாளில்  இளைஞர்களுக்கு 75,000  நியமன கடிதங்களை மத்திய அரசு வழங்கியதை அவர் நினைவுகூர்ந்தார். “நாட்டின் இளைஞர்களுக்கு  வேலைவாய்ப்புகள் வழங்க இயக்கமுறையில் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது என்பதற்கு இன்றைய வேலைவாய்ப்பு விழா எடுத்துக்காட்டாகும்” என்று பிரதமர் கூறினார்.

ஒரு மாதத்திற்கு முன் தொடங்கிய வேலைவாய்ப்பு விழா முன் முயற்சியை நினைவுகூர்ந்த பிரதமர், பல மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் அவ்வப்போது இத்தகைய வேலைவாய்ப்பு விழாக்களுக்கு ஏற்பாடு செய்ததாக குறிப்பிட்டார். மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப்பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், லடாக், அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவுகள், டாமன் டியூ, தாத்ரா நாகர்ஹவேலி, சண்டிகர் ஆகியவற்றின் அரசுகளால் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டிருப்பது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். ஒரு சில நாட்களில் கோவாவும், திரிபுராவும் கூட இதே போன்ற வேலைவாய்ப்பு விழாக்களுக்கு ஏற்பாடு செய்யவிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார். பிரமாண்டமான இந்த முயற்சியில் இரட்டை என்ஜின் அரசுகளின் செயல்பாட்டை பாராட்டிய பிரதமர், இத்தகைய வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் இந்திய இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

 நாட்டின் மிகப்பெரிய பலமாக இளைஞர்கள் இருக்கிறார்கள் என்று பிரதமர் கூறினார். தேச கட்டமைப்புக்காக இளைஞர்களின் திறமையையும், சக்தியையும் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளிக்கிறது. பணிநியமனம் பெற்ற அரசு ஊழியர்களை அவர் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். மிகச்சிறப்பான காலகட்டத்தில் அதாவது அமிர்தகாலத்தில் இந்த முக்கியமான பொறுப்பை அவர்கள் ஏற்கிறார்கள் என்பதை பிரதமர் நினைவுபடுத்தினார்.

திவாஹர்

Leave a Reply