மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் சிஓபி 27-ன் நிறைவுக் கூட்டத்தில் பேசினார்.

பருவநிலை மாற்றம் குறித்த ஐ.நா. கட்டமைப்பு மாநாட்டின் சிஓபி 27வது அமர்வின் நிறைவு நிகழ்ச்சி ஷார்ம்-எல் –ஷேக்கில் இன்று நடைபெற்றது. உலகின் கூட்டான காலநிலை இலக்குகளை அடைவதை நோக்கிய  நடவடிக்கைகளை மேற்கொள்ள நாடுகள் ஒன்றிணைந்து வருவது என்பதுடன் முந்தைய வெற்றிகளில் இருந்து திட்டங்களை வகுத்தல் மற்றும் எதிர்கால லட்சியத்திற்கு வழி வகுத்தல் என்ற நோக்கில் நடத்தப்பட்ட மாநாடு நிறைவடைந்தது. இந்தக் கூட்டத்தில் இந்தியப் பிரதிநிதிகள் குழுவின் தலைவரும், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை  அமைச்சருமான திரு பூபேந்தர் யாதவ் பேசினார்.

“தலைவர் அவர்களே,

இழப்பு மற்றும் சேத நிதியம் அமைப்பது உட்பட இழப்பு மற்றும் சேத நிதி ஏற்பாடுகளுக்கான ஒப்பந்தம் உறுதிசெய்யப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சிஓபி-க்கு நீங்கள் தலைமை வகிக்கிறீர்கள். உலகம் இதற்காக நீண்ட காலம் காத்திருந்தது. இதில் ஒருமித்த கருத்தை உருவாக்க உங்களின் அயராத முயற்சிகளுக்கு நாங்கள் உங்களைப் பாராட்டுகிறோம்.

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நமது முயற்சிகளில்,  நிலையான வாழ்க்கை முறைகள் மற்றும் நிலையான நுகர்வு மற்றும் உற்பத்தி முறைகளுக்கு மாறுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய முடிவை நாங்கள் வரவேற்கிறோம்.

விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பில் பருவநிலை நடவடிக்கை குறித்த 4 ஆண்டு செயல் திட்டத்தை நாம்  உருவாக்கி இருப்பதை நாங்கள் கவனத்தில் கொள்கிறோம்.

மில்லியன் கணக்கான சிறு விவசாயிகளின் வாழ்வாதாரமான விவசாயம், பருவநிலை மாற்றத்தால் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, தணிப்புப் பொறுப்புகளில் நாம் அவர்களுக்குச் சுமையை ஏற்றக் கூடாது.

உண்மையில்,விவசாயத்தில் தணிப்பு என்பதை  இந்தியா அதன் தேசிய வளர்ச்சி மன்றத்திலிருந்து வெளியே  வைத்துள்ளது.

மாற்றத்திற்கான செயல்த் திட்டத்தையும் நாங்கள் உருவாக்கி இருக்கிறோம்.

பெரும்பாலான வளரும் நாடுகளுக்கு, நியாயமான  மாற்றத்தை கரியமிலவாயு முற்றிலும் இல்லாமல் ஒழிப்பதுடன்  ஒப்பிட முடியாது, ஆனால் குறைந்த அளவு கார்பன் உருவாவதைக் குறிக்கலாம்.

எரிபொருள் கலவைத் தேர்வு மற்றும் நீடிக்க வல்ல வளர்ச்சி இலக்குகளை அடைவதில் வளரும் நாடுகளுக்கு சுதந்திரம் தேவை.

வளர்ந்த நாடுகள் பருவநிலை நடவடிக்கையில் முன்னணியில் இருப்பது, உலகில்  நியாயமான மாற்றத்தின் மிக முக்கியமான அம்சமாகும்.

தலைவர் அவர்களே உங்களுக்கு நன்றி.”

திவாஹர்

Leave a Reply