53-வது இந்திய சர்வதேச திரைப்படவிழாவில் பங்கேற்பவர்களுக்கு மறக்கமுடியாத அனுபவம் கிடைக்கும் என்று மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் நம்பிக்கை தெரிவித்தார்.

கோவாவில் நாளை தொடங்கப்படவுள்ள 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் விருந்தினர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர். எல். முருகன் அன்பான வரவேற்பைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கு  ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கும் வரவேற்பை குறிப்பிடுவதில் மகிழ்ச்சி அடைவதாக அமைச்சர் கூறியுள்ளார்.  “இந்த ஆண்டு, இந்திய மற்றும் சர்வதேச பிரிவுகளில் பங்கேற்க வந்துள்ள பதிவுகளின்  எண்ணிக்கை, இந்த திருவிழாவின் உலகளாவிய பிரபலத்தையும், வரவேற்பையும்  எடுத்துக்காட்டுகிறது” என்று அவர் கூறியுள்ளார்.

பல்வேறு பிரிவுகள் மற்றும் கருப்பொருள்கள் திரைப்பட ஆர்வலர்களுக்கு சமூக நலன் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும்  படங்களை இந்திய சர்வதேச திரைப்பட விழா கொண்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.  திரைப்பட விழாவில் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள், பயிலரங்குகள் போன்றவற்றையும் வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா,  அதில் பங்கேற்பவர்கள் அனைவருக்கும் மறக்கமுடியாத அனுபவமாக மாறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply