53-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவில் அர்ஜென்டின நாட்டைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட 8 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

கோவாவில் வரும் 20-ஆம் தேதி முதல் நடைபெற உள்ள 53-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவில் அர்ஜென்டின நாட்டைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட 8 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. ராட்ரிகோ க்வெரெரோ இயக்கத்தில் 2021-ஆம் ஆண்டு வெளிவந்த செவன் டாக்ஸ் (Seven Dogs) என்ற திரைப்படம் சர்வதேச பிரிவில் உயரிய தங்கமயில் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.ஆண்ட்ரியா பிராகா இயக்கத்தில் வெளிவந்த செல்ஃப் டிபன்ஸ் (Self Defence) திரைப்படம் அறிமுக இயக்குநரின் சிறந்த படம் என்ற விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவை தவிர மிஸ் விபார்க் (Miss Viborg), தி பார்டர்ஸ் ஆஃப் டைம் (The borders of Time), தி சப்ஸ்டிடியூட் (The Substitute), ரோப் ஆஃப் ஜெம்ஸ் (Robe of Gems), இயாமி (Eami) ஆகிய அர்ஜென்டின நாட்டு திரைப்படங்களும் திருவிழாவில் திரையிடப்பட உள்ளன.

எம்.பிரபாகரன்

Leave a Reply