பாலியில் ஜி-20 மாநாட்டிற்கு இடையே பிரதமரின் ஆஸ்திரேலிய பிரதமருடனான சந்திப்பு.

பாலியில் ஜி-20 மாநாட்டிற்கு இடையே  ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பேன்சை  பிரதமர் நரேந்திர மோதி இன்று (16.11.2022) சந்தித்துப் பேசுகிறார். விரிவான செயல்திட்ட கூட்டாண்மை கீழ், இரு நாடுகளுக்கு இடையேயான உறவு சிறப்பாக இருப்பது குறித்தும் இந்தியா – ஆஸ்திரேலியா இடையே உயர்மட்ட பேச்சுக்கள் வழக்கமாக நடைபெறுவது குறித்தும் இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். பாதுகாப்பு, வர்த்தகம், கல்வி, தூய்மை எரிசக்தி மற்றும் இருநாட்டு மக்களுக்கு இடையேயான உறவு ஆகிய பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு குறித்து  அவர்கள் ஆய்வு செய்தனர். கல்வி குறிப்பாக உயர்கல்வி, தொழிற்கல்வி, பயிற்சி மற்றும் திறன் கட்டமைப்பு, ஆகிய துறைகளில் உள்ள கூட்டாண்மை குறித்து விரிவாக விவாதித்தனர்.

இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில், ஸ்திரத்தன்மை மற்றும் அமைதி நிலவுவது பருவநிலை தொடர்பான விவகாரங்கள் மற்றும் இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம் உள்ளிட்ட குறித்து தங்களது கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். அத்துடன் பிராந்தியம் மற்றும் சர்வதேச விவகாரங்களில்  பரஸ்பரம் இருநாட்டு நலன் குறித்த தங்களது கருத்துக்களையும் தலைவர்கள் பரிமாறிக் கொண்டனர்.

விரைவில் இந்தியாவில் ஆஸ்திரேலிய பிரதமர் திரு அல்பேன்சை வரவேற்பதை எதிர்நோக்கியிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply